NATIONAL

பிரதமர் துறையின் மடாணி ஐடில்பித்ரியின் திறந்த இல்ல உபசரிப்பில் மாமன்னர் கலந்து கொண்டார்

புத்ராஜெயா, மே 8 – இன்று நடைபெற்ற பிரதமர் துறையின் (ஜேபிஎம்) மடாணி ஐடில்பித்ரியின் திறந்த இல்ல உபசரிப்பில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

அவரை மதியம் 12.47 மணிக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் ஆகியோர் வரவேற்றனர்.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸுகி அலியும் அவரை வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மாமன்னர் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில், நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் துறை ஊழியர்கள் மற்றும் அதன் ஏஜென்சிகள் அடங்கிய 5,000 விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை நடத்துவதன் முக்கிய நோக்கம் அரசு பணியாளர்களுக்கும் நிர்வாகக் குழுவிற்கும் இடையே ஒற்றுமை, நல்லிணக்க உணர்வை வளர்ப்பது ஆகும் என ஜேபிஎம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

– பெர்னாமா


Pengarang :