NATIONAL

எரிதிராவகத் தாக்குதல் தொடர்பில் சமூக ஊடகக் கணக்கு உரிமையாளருக்கு போலீஸ் வலை வீச்சு

கோலாலம்பூர், மே 8 – தேசியக் கால்பந்து வீரர் முகமது ஃபைசல் அப்துல் ஹலீமுக்கு எதிரான எரிதிராவக  வீச்சு தொடர்பான வாக்குமூலத்தின் அடிப்படையில் ‘முகமது இம்ரான் சுரேஷ்’ என்ற பெயர் கொண்ட சமூக ஊடக கணக்கின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக அந்த நபர் கூறிக் கொண்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கான தெளிவான நோக்கத்தைத் தீர்மானிக்க நாங்கள் எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்.  இச்சம்பவம்  தொடர்பான தகவல்களைக் கொண்ட எந்தவொரு நபரும் விசாரணைக்கு உதவ  முன்வரலாம். அதற்கு பதிலாக அவர்கள் வெளியிடும் அறிக்கை விசாரணைக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அவர் இன்று கூறினார்.

அதே வேளை, நேற்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சந்தேக நபருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று  வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

போலீஸாரின் விசாரணையை பாதிக்கக்கூடிய வகையில் இச்சம்பவம் குறித்து  ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும் ரஸாருடின் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

முன்னதாக,  இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காகக் காவல்துறை தன்னை அழைத்ததாக இன்ஸ்டாகிராம் கணக்கின் உரிமையாளர் ஒருவர் கூறியிருந்தார்.


Pengarang :