ECONOMYMEDIA STATEMENTNATIONAL

துண்டுகளாக்கப்பட்ட 1.5 கிலோ கோழி 12.00 வெள்ளிக்கு விற்பனை- பி.கே.பி.எஸ். தகவல்

ஷா ஆலம்,  அக் 13- சிலாங்கூர் மாநில விவசாய மேம் பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) நான்கு கிளைகளில் இன்று தொடங்கி வரும் ஞாயிறுக் கிழமை வரை துண்டுகளாக்கப் பட்ட ஒன்றரை கிலோ கோழி (கலவையானது) 12.00 வெள்ளிக்கு விற்கப்படும்.

ஷா ஆலம் செக்சன் 14, விஸ்மா பி.கே.பி.எஸ்., ஷா ஆலம், செக்சன் 9, எஹ்சான் பி.கே.பி.எஸ்.,  ஏஹ்சான் பி.கே.பி.எஸ். (மேரு, தாமான் டத்தோ பண்டார், ஜாலான் முவாஃபகாட்1) மற்றும் சிலாங்கூர் ஃப்ரூட் வேலி கியோஸ்க் ஏஹ்சான் ஆகிய இடங்களில் இந்த விற்பனை நடைபெறும்.

எங்களின் நான்கு ஏஹ்சான் கிளைகளுக்கு வருகை  தாருங்கள். இந்த விற்பனை மூன்று தினங்களுக்கு மட்டும்தான். குறிப்பிட்ட அளவிலான பொருட்கள் மட்டுமே உள்ளன. கையிருப்பு தீர்வதற்குள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என பி.கே.பி.எஸ். தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

துண்டுகளாக்கப்பட்ட ஒன்றரை கிலோ கோழியின் அசல் விலை வெ.16.50 என்றும் இந்த சலுகை காலத்தில் வெ.4.50 கழிவு வழங்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட மெகா ஏஹ்சான் மலிவு விற்பனையின் போது 30,000 கோழிகள் மற்றும் 10,712 தட்டு முட்டைகளை விற்று பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.

வெள்ளிக்கிழமை தவிர்த்து வாரத்தின் இதர அனைத்து தினங்களிலும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை பி.கே.பி.எஸ். மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது.


Pengarang :