ECONOMYMEDIA STATEMENT

வேலையின்மை விகிதம்   3.4 விழுக்காடு குறைந்தது!  மனிதவள அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

கோலாலம்பூர், அக். 14-  ஏறக்குறைய ஒரு வயதுடைய ஒற்றுமை அரசாங்கம் ஒவ்வொரு முயற்சியின் மூலம் ஒற்றுமையும் தாயகத்தின் வலிமையையும்  உருவாக்குகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது இதனை சுட்டிக் காட்டிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,  மலேசியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக உள்ளது என்றார்.
வேலையின்மை விகிதம் வெற்றிகரமாக 3.4 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக் காட்டினார்.  கோவிட் காலக்கட்டத்தின்போது ஒப்பிடுகையில் இப்போது இந்த எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது என்றார்.
பட்ஜெட் தாக்குதலுக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய மனிதவள அமைச்சர் வ
 சிவகுமார், நாட்டின் வேலையின்மையை குறைப்பதில் தமது அமைச்சு மிகவும் கடுமையாக போராடியது என்றார்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் சார்பில்  நாடு தழுவிய நிலையில் வேலை வாய்ப்பு கண்காட்சியை நடத்தி லட்சக்கணக்கான பேர் வேலை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

Pengarang :