ECONOMYNATIONAL

தேசிய உணவு உத்தரவாதத் திட்டத்திற்கு ஏற்ப சிலாங்கூர் விவசாயக் கொள்கை அமைந்துள்ளது

ஷா ஆலம், அக் 14 –  கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சிலாங்கூர் வேளாண் உருமாற்றக் கொள்கைக்கு (பீடா) ஏற்ப   உணவுப் பாதுகாப்புத் திட்டமும் அந்நோக்கத்திற்காக இம்மாநிலத்தை முன்னோடியாகத் தேர்ந்தெடுக்கும்  நடவடிக்கையும் அமைந்துள்ளது.

இதன் அடிப்படையில் மக்களின் உணவு விநியோகத் தேவைகளுக்கு உத்தரவாதமளிக்கும் திட்டத்தை ஒருங்கிணைக்க அமைச்சுடன் இணைந்து பணியாற்ற மாநில அரசு தயாராக உள்ளது என்று வேளாண்மை துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள திட்டத்தின் மூலம் தரமான விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும்  விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி  விவசாயத் துறையை மேன்மைப்படுத்தவும் இயலும்  என இஷாம்  ஹஷிம் கூறினார்.

இந்தத் திட்டம் மாநில அரசின் திட்டத்துடன் ஒத்துப்போகிறது. இது விளைச்சலில் மட்டும் கவனம் செலுத்தாமல் முழு விவசாய சூழலையும் உள்ளடக்கியுள்ளது.

அவற்றில் விதைப்பு அல்லது இனப்பெருக்கம், மண் வளங்களைப் பாதுகாக்க கூடிய இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் அடங்கும்.  இதன் மூலம் நீர் மாசுபடுதல் தடுக்கலாம் என அவர் கூறினார்.

நேற்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ​​இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க உணவு உத்தரவாதத் திட்டத்திற்கு 40 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

அந்தத் தொகையில் ஐந்து கோடி வெள்ளி  உரம் கொள்முதல் செய்வதற்கும் சிலாங்கூர், பேராக், திரங்கானு மற்றும் பினாங்கில் மேற்கொள்ளப்படும் முன்னோடித் திட்டங்களுக்கும்  பயன்படுத்தப்படவுள்ளது


Pengarang :