ANTARABANGSAECONOMY

பிரதமர் அன்வார் ரியாத்தில் சவுதி தொழிலதிபர்களை சந்தித்தார்

ரியாத், அக்டோபர் 21 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சவுதி அரேபியாவிற்கு தனது பணி பயணத்தின் கடைசி நாளான இன்று தொழில்துறை தலைவர்களை சந்தித்து, உலக முதலீட்டாளர்களை மலேசியாவிற்கு ஈர்க்கும்  ஒற்றுமை அரசாங்கத்தின் முயற்சிகளை தொடர்ந்தார்.

ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) உச்சி மாநாடு நேற்று முடிவடைந்த பிறகு, நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வர், சவுதி அரேபியாவின் வர்த்தக அமைச்சர் மஜித் அப்துல்லா அல்கசாபியையும், சவுதி அராம்கோ வையும் (அரம்கோ) சந்திக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.

மலேசியாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களை பற்றி விவாதிக்க  அதன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமின் எச் நாசர். அவருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  தொங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல்  தொங்கு அப்துல் அஜிஸ், சவுதி அரேபியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ வான் ஜைதி வான் அப்துல்லா ஆகியோரும் உடன் சென்றனர்.

முன்னதாக, தென்கிழக்கு ஆசியாவில் சவுதி அரேபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளர்ச்சிக்கு மலேசியாவை மையமாக மாற்ற இருப்பதாக அரம்கோ கூறியது. 2017 ஆம் ஆண்டில், பெட்ரோனாஸ் மற்றும் அராம்கோ ஆகியவை பெங்கராங், கோத்தா திங்கி, ஜோகூரில் ஒரு கூட்டு முதலீட்டை நிறுவின.

அரம்கோ உடனான இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும், சரியான பாதையில் சென்றதாகவும் தெங்கு ஜஃப்ருல் மலேசிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரம்கோ  உடனான கலந்துரையாடலின் முடிவுகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.

இரு நாடுகளிலும் பல ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம் மற்றும் விமானப் போக்குவரத்துத் திட்டங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்திய மலேசிய மற்றும் சவுதி அரேபிய நிறுவனங்களின் தலைவர்களையும் பிரதமர் சந்தித்துப் பேசினார்.

டாகாங் நெக்ஸ்சேஞ்ச் பிஎச்டி (டிஎன்எக்ஸ்) மற்றும் அஜ்லான் & பிரதர்ஸ் ஹோல்டிங் குரூப், எம்ஜிபி பிஎச்டி மற்றும் அலமேரியா ரியல் எஸ்டேட் மேம்பாடு, மொபிலிட்டி ஒன் எஸ்டிஎன் பிஎச்டி, அல்-நெஸ்மா ஹோல்டிங் கோ லிமிடெட் மற்றும் எஸ்ஏஆர்ஹெச் ஆகியவை அடங்கும்.

அன்வார் பின்னர், வெஸ்டர் ஆகாய சர்வீஸ் மற்றும் முக்கமாலா ஆகாய பயண நிறுவனம், டாகாங் நிக்ஸ்சேஞ் பெர்ஹாட் மற்றும் அஜ்லான் புரோஸ் ஹோல்டிங் குரூப், துவிஸ்கோட்  டெக்னாலஜிஸ் சென். பெர்ஹரட் அத்துடன் எம்ஜிபி பெர்ஹாட் மற்றும் ஷானி அலாமிரியா  ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.

சவூதி அரேபியாவின் கவர்னர் யாசிர் அல்-ருமையனின் பொது முதலீட்டு நிதியத்திலிருந்து முதலீட்டு ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்க பிரதமர் மரியாதைக்குரிய விஜயத்தையும் பெற்றார்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை ஒரு புதிய நிலைக்கு மேலும் அதிகரிக்க மலேசியா மற்றும் சவுதி அரேபியாவின் தீவிரத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பை இன்றைய நிகழ்ச்சி நிரூபித்துள்ளதாக தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

“இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான முயற்சிகள் எவ்வளவு விரைவாக மேற்கொள்ளப் பட்டன என்பதை நாம் பார்க்கலாம். இது அவர்களின் தீவிரத் தன்மையையும் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது,” என்றார்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் (மிட்டி), மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (மிடா) மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள மலேசிய தூதரகம் ஆகியவை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.

1990 இல் இரு பிராந்திய முகாம்களும் உறவுகளை ஏற்படுத்திய பின்னர் முதல் முறையாக நடைபெற்ற ஆசியான்-ஜிசிசி உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அன்வார் இரண்டு நாள் வேலைப் பயணமாக ரியாத் சென்றுள்ளார்.

சவுதி அரேபியா மேற்கு ஆசிய நாடுகளில் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும், 2022 இல் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் US$10.26 பில்லியன் (RM48.91 பில்லியன்) ஆகும், இது 2021ல் இருந்து 159.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் பார்ச்சூன் குளோபல் 500, 105 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM500.5 பில்லியன்) விற்று முதலுடன் சவுதி அராம்கோவை உலகின் முதல் ஆறு லாபகரமான நிறுவனங்களை சேர்ந்தது.


Pengarang :