ECONOMYSELANGOR

ஆர்.எஸ்.1 திட்டத்தின் வெற்றிக்கான புதிய பொருளாதார வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், அக் 26- ஆசியானின் நுழைவாயிலாக உருவாகும் இலக்கை கொண்டுள்ள சிலாங்கூர், புதிய தொழிலியல் பெருந்திட்டம் 2030 (என்.ஐ.எம்.பி.) மூலம் கிடைக்கும் பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்குரிய பொருத்தமான இடத்தில் உள்ளது.

நாட்டின் பொருளாதாரச் சக்தி என்ற முறையில் மக்கள் மற்றும் நட்புறவான வர்த்தகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசின் இரட்டை செயலாக்க முறையை மேலும் வலுப் படுத்துவதன் மூலம் இதனை அடைய முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் குறிப்பாக இட்ரிஸ் எனப்படும் தெற்கு ஒருங்கிணைந்த மேம்பாடு வட்டாரம் உள்ளிட்ட மூன்று பிரதேசங்களில் உள்ள மேம்பாட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் இந்நடவடிக்கை முக்கியமானதாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

இட்ரிஸ் திட்டம் தவிர்த்து சபாக் பெர்ணம் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பகுதி (சப்டா) மற்றும்  கிள்ளான் ஆற்றின் நெடுகிலும் உள்ள பகுதியில் மேற்கொள்ளப்படும் கெர்பாங் மெரிடிம் சிலாங்கூர் (எஸ்.எம்.ஜி.) ஆகியவையும் இதில் அடங்கும் என்றார் அவர்.

இதனிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை முதலீட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஸப்ருள் தெங்கு அப்துல் அஜிசுடன் நடத்தப்பட்ட சந்திப்பு குறித்து கருத்துரைத்த அமிருடின் என்.ஐ.எம்.பி. 2030 வழிகாட்டி கோட்பாட்டை வெற்றி அடையச் செய்யும் கடப்பாட்டை சிலாங்கூர் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் வெற்றியடைவது மற்றும் தொழில்நுட்ப ஆற்றலை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட தொழில்முறை உருமாற்றத் திட்டத்திற்கு உந்துதல் அளிப்பதற்காக நான்கு பணி இலக்குகளை என்.ஐ.எம்.பி. 2030 வகுத்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :