SELANGOR

இ.சி.ஆர்.எல். இரயில் திட்டம் கிள்ளானில் நான்கு ஊராட்சி திட்டப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது

கிள்ளான், செப் 1- கிள்ளானில் 20.05 கிலோ மீட்டர் பகுதியில்
மேற்கொள்ளப்படும் கிழக்குக் கரை இரயில் திட்டத்தில் (இ.சி.ஆர்.எல்.)
நான்கு ஊராட்சித் திட்டப் பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.

காப்பார் மேரு, கிளாங் உத்தாமா, செமெந்தா மற்றும் சுங்கை கிளாங்
ஆகியவையே அந்த நான்கு பிரிவுகளாகும் என்று கிள்ளான் நகராண்மைக்
கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் காப்பார் மற்றும் ஜாலான் கஸ்டமில் இரு இரயில்
நிலையங்கள் அமைக்கப்படுவதாகக் கூறிய அவர், இந்த தடத்தின்
நெடுகிலும் உள்ள 1.5 கிலோ மீட்டர் பகுதியை நிலத் தகுதி மாற்றும்
செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

அதே சமயம், இந்த உத்தேச இ.சி.ஆர்.எல். திட்டத்திற்கான நிலத் தகுதி
மாற்றத்திற்கு மாநில ஆட்சிக்குழு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம்
தேதி அங்கீகாரம் அளித்து விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள எம்.பி.கே. தலைமையகத்தில் நடைபெற்ற 2035 ஊராட்சி
மேம்பாட்டு நகலை விளம்பரப்படுத்துதல் மற்றும் பொதுமக்கள் கருத்து
கேட்பு நிகழ்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கிள்ளான் விரைவில் மாநகர் அந்தஸ்தை அடையவுள்ள நிலையில்
வெள்ளம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இந்த ஊராட்சி
மன்றத் திட்டத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அவர் கூறினார்.

இந்த ஊராட்சி மன்ற நகல் திட்டம் தொடர்பில் பொது மக்களின்
கருத்துகளைப் பெறுவதற்காகக் கடந்த மாதம் 18 முதல இம்மாதம் 16 வரை
இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.


Pengarang :