NATIONAL

பாலஸ்தீன நெருக்கடி- ஓ.ஐ.சி.யின் அவசரக் கூட்டத்திற்கு மலேசியா ஆதரவு

கோலாலம்பூர், செப் 1- துருக்கி மற்றும் சவூதி அரேபிய தலைவர்களைத்
தொடர்பு கொண்டு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓ.ஐ.சி.) அவசரக்
கூட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்குமாறு
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ரி அப்துல் காடீரை தாம்
பணித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை எதிர்த்து வரும் பிரேசில், ரஷியா மற்றும்
சீனா ஆகிய நாடுகளும் இந்த அவசரக் கூட்டத்தில் பங்கு பெற வேண்டும்
என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு ஓ.ஐ.சி. அவசரக்
கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற துருக்கி மற்றும் சவூதி அரேபியாவின்
பரிந்துரையை மலேசியா வரவேற்பதாக முன்னதாகப் பிரதமர்
மக்களவையில் கூறியிருந்தார்.

பாலஸ்தீன விவகாரத்தில் குறிப்பாக காஸாவுக்கு மனிதாபிமான
உதவிகளை வழங்குவதில் துருக்கி மலேசியாவுடன் அணுக்கமாக
ஒத்துழைத்து வருவதாக மலேசியாவுக்கான அந்நாட்டின் தூதர் எமிர் சலிம்
யுக்செல் கூறினார்.

கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கி துருக்கிக்கு இரண்டு நாள்
அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் அன்வார் துருக்கிய
அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகனுடன் நடத்திய சந்திப்பின் போது
இவ்விகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :