SELANGOR

சிலாங்கூரில் செயல்படும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான நர்சரிகள் குழந்தைகள்  தகுந்த கல்வியைப் பெற உதவுகின்றன

ஷா ஆலம், நவ 1: சிலாங்கூரில் செயல்படும் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான நர்சரிகள் (OKU) சிறப்புக் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் அக்குழந்தைகளுக்கு தகுந்த கல்வியை வழங்க உதவுகின்றன.

குழந்தைகளின் திறனை அதிகரிக்க, அன்பான அணுகுமுறையை மாற்றுத்திறனாளிகளுக்கான நர்சரிகள் பயன்படுத்துகின்றன என சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சஃபாரி தெரிவித்தார்.

லிட்டில் லீடர்ஸ் சைல்ட் கேர் சென்டர் (எல்எல்சிசி) மற்றும் இஸ்திகாஜெயா மாற்றுத்திறனாளி நர்சரி ஆகியவை மத்திய அரசின் மானியமாக RM374,520 பெற்றதாக அவர் விளக்கினார்.

“நாங்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நர்சரி அறிமுகப்படுத்துகிறோம் மற்றும் சிறப்பு குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அக்குழந்தைகளின் இயலாமைக்கு ஏற்ற கல்வியைப் பெற உதவுவதற்காக அதன் எண்ணிக்கையை மேம்படுத்துகிறது.

“மேலும், குறிப்பாகச் சிலாங்கூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான நர்சரிகளை அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகள் நிறுவுவதையும் மாநில அரசு ஊக்குவிக்கிறது,” என்று நேற்று எல்.எல்.சி.சி நர்சரியின் தொடக்க விழாவில் அவர் கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபுவும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், 2021 இல் நிறுவப்பட்ட எல்எல்சிசி, சிலாங்கூரில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நர்சரி ஆகும் என அவர் தெரிவித்தார்.

“2019 இல் தொடங்கிய சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் உதவித் திட்டத்தின் (அனிஸ்) கீழ் நர்சரி வாடகைக்கு நிதியளிப்பது வழியாகவும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை களை வழங்குவதன் மூலமும் எம்பிஐ நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளது” என்று அவர் கூறினார்.


Pengarang :