SELANGOR

புயலினால் 24 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன

பெண்டாங், நவ 2: நேற்று பிற்பகல் வீசிய புயலின் காரணமாக முகிம் ஆயர் புத்தேவில் 74
குடியிருப்பாளர்களை உள்ளடக்கிய மொத்தம் 24 வீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தால் குறிப்பாகத் தாமான் ஸ்ரீ
டெலிமா, ஜாலான் ஜெனுனில் உள்ள வீடுகளின் கூரைகள், காற்றினால் அடித்துச்
செல்லப்பட்டன என பெண்டாங் மாவட்ட குடிமைத் தற்காப்புப் படை (APM) அதிகாரி
(PA) யுஸ்லினா யூசோப் கூறினார்.

"இச்சம்பவம் தொடர்பான புகாரைப் பெற்றவுடன், தற்காப்புப் படை உறுப்பினர்கள்
சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் தாமான் ஸ்ரீ டெலிமாவில் 72 பேர்
மற்றும் கம்போங் புலாவ் மச்சாங்கில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது
கண்டறியப்பட்டது.

“சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது மற்றும் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை; என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதுவரை தற்காலிக தங்கும் மையம் (பிபிஎஸ்) திறக்கப்படவில்லை என்றும்,
பாதிக்கப்பட்டவர்கள் இப்போது நெருங்கிய உறவினர்கள் வீட்டில் தஞ்சம்
அடைந்துள்ளனர் என்றும் யுஸ்லினா கூறினார்.

புயல் காரணமாகப் பெண்டாங் சுகாதார கிளினிக் மற்றும் கேடா ஆசம் ஜாவா வசிப்பு
பகுதி அருகே பல மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டதாக அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :