MEDIA STATEMENTNATIONAL

ஜிபிஎஸ் வெற்றிகரமாக ஜெபக் மாநில சட்டமன்ற தொகுதியை தற்காத்து கொண்டது

பிந்துலு, நவ 4 – கபூங்கான் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்) ஜெபக் மாநில சட்டமன்ற தொகுதியை வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொண்டது.
அதன் வேட்பாளர் இஸ்கந்தர் துருக்கி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய (EC) தேர்தல் அதிகாரி  அபாங் ஜைனுடின் அபாங் துருக்கி டேவான் சூரா பிந்துலுவில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் இரவு 8.30 மணிக்கு முடிவுகளை அறிவித்தார்.

சரவாக் கிளை தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையின் (நாடா) முன்னாள் இயக்குனர் இஸ்கந்தர், 54, பார்ட்டி பூமி கென்யாலாங் (பிபிகே) வேட்பாளர் ஸ்டீவன்சன் ஜோசப் சும்பாங் மற்றும் பார்ட்டி அஸ்பிராசி ரக்யாட் சரவாக் (ஆஸ்பிராசி) வேட்பாளர் சியெங் லியா ஃபிங்கை 8,784 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.

PBK (பிபிகே) வேட்பாளர் ஸ்டீவன்சனின் 854 வாக்குகள் மற்றும் பார்ட்டி அஸ்பிராசி ரக்யாட் சரவாக் (ஆஸ்பிராசி) வேட்பாளர் சியெங்கின் 431 வாக்குகளுக்கு  எதிராக 9,638 வாக்குகள்  பெற்று வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் மொத்த 22,804 வாக்காளர்களில், 22,761 சாதாரண வாக்காளர்கள், 43 போலீஸ்காரர்கள் என மொத்தம் 48.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆறு முறை பதவியில் இருந்த டத்தோ தாலிப் சுல்பிலிப் செப்டம்பர் 15 அன்று இறந்ததைத் தொடர்ந்து இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. 2021 இல் நடந்த மாநிலத் தேர்தலில் தலிப் 4.243 வாக்குகள் பெரும்பான்மையில் ஜெபக் தொகுதியில் வெற்றி பெற்றார்.


Pengarang :