MEDIA STATEMENTNATIONAL

மந்திரி புசார் தம்பதிகள் சுங்கை துவாவில் உள்ள இந்தியர்களின்  வீடுகளுக்கு  தங்கள் தீபாவளி வருகையை தொடர்ந்தனர்

கோம்பாக், நவ 13: சுங்கை துவா மாநில சட்டமன்ற தொகுதியில்  தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்  தனது பாரம்பரியத்தை டத்தோ மந்திரி புசார்  தொடர்ந்தார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரது மனைவி, டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முஹமட் ஆகியோர் தாமான் அமானியா, பத்து கேவ்சில் உள்ள மக்கள் நீதிக் கட்சியின் (கெடிலன்) ஆர்வலர் ஆர் சங்கரின் வீட்டிற்கு சென்று, அவர்  குடும்பத்தினரை சந்தித்து  தீபாவளி வாழ்த்து  கூறியதுடன் மற்ற இடங்களுக்கும் அவர்  பயணத்தை மேற்கொண்டார்.

மாலை சுமார் 5.50 மணியளவில் அவருக்கும் அவரது மனைவிக்கும் வருகை தந்த விருந்தினர்களுக்கு பட்டாசு வெடித்து அடையாள வரவேற்பு அளிக்கப்பட்டது டன் அவர்களுக்கு இடியாப்பம் மற்றும் பிரியாணி சாதம் பரிமாறப்பட்டது.

கோம்பாக் எம்.பி.யான  அவர்  குழந்தைகளுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கியதோடு, அவர்களுடனும் மற்ற விருந்தினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மந்திரி புசார்  பதவி ஏற்பதற்கு முன்பே  தீபாவளி பண்டிகையின் போது நண்பர்கள், கட்சி உறுப்பினர்களின்  வீடுகளுக்கு  வருகை புரியும் பண்பை  டத்தோ மந்திரி புசார் அமிருடின் கொண்டிருந்தார் என்று சங்கர் கூறினார்.

2008 ஆம் ஆண்டு அவர் பத்துமலை தொகுதியின்  மாநில சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப் பட்ட போது, ​​இங்குள்ள இந்திய சமூகத்துடன்  உறவாடி  மகிழ்ந்தவர். முன்பு  அடிக்கடி எங்கள் வீடுகளுக்கு வந்து, ஓய்வு நேரங்களை நண்பர்களுடன் இங்கு கழித்துள்ளார்.  “இன்று அவரது வருகையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார்.


Pengarang :