MEDIA STATEMENTNATIONAL

 சிலாங்கூர், பகாங்  ஹரப்பான் தேர்தல் இயந்திரங்கள் கெமாமான் இடைத்தேர்தலுக்கு உதவும்.

கோம்பாக், 13 நவ: சிலாங்கூர் மற்றும் பகாங்  பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) பாரிசான் நேசனல் (பிஎன்)  தேர்தல் இயந்திரங்கள் கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதவ தயாராக உள்ளன.

ஹராப்பான் பகாங் தலைவரான  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, இடைத் தேர்தல் வேலைகளை தொடங்குவதற்கு உதவுவதற்காக பகாங்கில் உள்ள கட்சி இயந்திரத்துடன் தனது தரப்பு தொடர்பு கொண்டுள்ளது என்றார்.

“நாங்கள்  அங்கே உதவுவோம், குறிப்பாக சுக்காய் வட்டாரத்தில் கவனம் செலுத்துவோம்   என்றார். அந்த நாடாளுமன்ற தொகுதியில்  ஒரு சட்டமன்ற தொகுதியான சுக்காய் மாநில சட்டமன்ற தொகுதியில் எங்களுக்கு  ஓரளவு  செல்வாக்கு  உண்டு என குறிப்பிட்ட  அவர், நாங்கள் அடிப்படைகளை தயார் செய்துள்ளோம்.  ஆனால் பி என் வேட்பாளரின் செயல்கள் மற்றும் பணிகளும்  அதனை மேலும் வலுப்படுத்த முடியும்  என்றார்.

“உண்மையில், நாங்கள் 1999 இல் அந்த தொகுதியில் சேவையாற்றியதால் எங்களுக்கு  உள்ள செல்வாக்கு மற்றும் தொடர்புகளை கொண்டு  அங்கு  ஒரு பெரிய தளம் அமைக்கலாம்  அவை  ஒற்றுமை அரசாங்கத்திற்கு வெற்றியைக் கொடுக்க உதவுவோம்,” என்று அவர் கூறினார்.

நேற்று தீபாவளி கொண்டாட்ட சுற்றுப் பயணத்தின்  போது கோம்பாக் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள இந்திய சமூகத்தை கண்டு தீபாவளி வாழ்த்துக்களை கூறும் பொழுது  செய்தியாளர்களிடம் இதனை கூறினார்

தேர்தல் ஆணையம் (SPR) நவம்பர் 18 ஆம் தேதி வேட்பாளர் நியமன நாளாகவும், டிசம்பர் 2 ஆம் தேதியை திராங்கானுவின்  கெமாமன் பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கான நாளாக அறிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே கூறுகையில், நவம்பர் 28 ஆம் தேதி ஆரம்ப வாக்களிப்பு நாள் 14 நாட்கள் பிரச்சார காலத்துடன் அமைக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்..

15வது பொதுத் தேர்தலில் (GE15) பாஸ் வேட்பாளர் சே அலியாஸ் ஹமிட்டின் வெற்றியை செப்டம்பர் 26 அன்று திரங்கானு தேர்தல் நீதிமன்ற தீர்ப்பின் படி ரத்து செய்ததை  தொடர்ந்து கெமாமன் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


Pengarang :