ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இடைத் தேர்தல் முடிவை விட  நாட்டு நலனே முக்கியம்.

செய்தி சு. சுப்பையா

கோலாலம்பூர்.நவ.20-  கெமமான் இடைத் தேர்தல் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் குடிநீர் கட்டணம் அதிகாரிக்கலாம் என்ற ஆருடம் பாதகமாக இருக்காதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அரசு நாட்டு நலனை முன் வைத்து செயல்படுகிறது. இடைத்தேர்தலில் தேசிய முன்னணியை சேர்ந்த நமது வேட்பாளர் தகுதி வாய்ந்தவர். இராணுவத்தில் நற்சேவை ஆற்றிய தளபதிகளில் ஒருவர் என்று அமைச்சர் நிக் நஸ்மி தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு தமிழ் ஊடகவியலாளர்களோடு சிறப்பு சந்திப்பு கூட்டத்தை தேசிய குடி நீர் ஆணையத்தின் தலைவரும் கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோ ஏற்பாடு செய்திருந்த. நிகழ்ச்சிக்கு இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சர் நிக் நஸ்மி தலைமை தாங்கினார்.

கெமமான் நாடாளுமன்ற  இடைத்தேர்தல் நடைபெறும் காலக் கட்டத்தில் குடிநீர் கட்டணம் அதிகரிக்கலாம் என்ற செய்தி பாதகத்தை கொண்டு வராதா என்று மலேசிய இன்சைடர் என்ற இணைய தள ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு அமைச்சர் மேற்கண்டவாறு பதில் கூறினார்.

மேலும் அரசு மேற்கொள்ளும் நாட்டு நலனுக்காக நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தமிழ் ஊடகங்கள் கொண்டு செல்ல வேண்டும்.

இதே போல் தேசிய குடி நீர் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இந்திய சமுதாயத்திடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு தான் இந்த சிறப்பு சந்திப்பு கூட்டத்தை நடத்தினோம். நாட்டு மக்கள் தொகையில் 6% பேர் இந்தியர்கள். அவர்களுக்கு நமது நடவடிக்கைகள் கொண்டு செல்ல வேண்டும் என்று தேசிய குடி நீர் ஆணையத்தின் தலைவருமான சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.


Pengarang :