தீபாவளி திறந்த சிறப்பு உபசரிப்பில் கலந்து  கொள்வதற்கு முன்பு அமைச்சர் நிக் நஸ்மி, சார்ஸ் சந்தியாகோ மற்றும் ஊடகவியலாளர்கள்.
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அடுத்த ஆண்டு குடிநீர் கட்டணம் உயரலாம்  அமைச்சர் ஆருடம்.

செய்தி, சு. சுப்பையா

கோலாலம்பூர் நவ 20 ;  அடுத்த ஆண்டு  குடிநீர்  கட்டணம்  உயரலாம்,  40 ஆண்டுகளுக்கு மேலாக  கட்டணம் உயர்த்தப்படவில்லை. புத்ரா ஜெயாவின் பல அரசுகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடிவெடுத்து இறுதியில் கை விட்டு விட்டன. குடிநீருக்கான செலவினம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிதிச் சுமையை எதிர் நோக்க குடி நீர் ஆணையம் ( SPAN ) , இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சிடம் பரிந்துரை வைத்துள்ளது.

இப்பரிந்துரையை அமைச்சரவை ஆராய்ந்து வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு குடிநீர் கட்டணம் அதிகரிக்கலாம் என்று அமைச்சர் நிக் நஸ்மி ஆருடம் கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு தேசிய நீர் ஆணையம் சிறப்பு தீபாவளி உபசரிப்பு நடத்தியது. அதன் தலைவர் கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள்  உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ இன்று தமிழ் ஊடகவியலாளர்களுடன்  நடத்திய சந்திப்பு கூட்டத்தில்  அமைச்சர்  இதனை  கூறினார்.

நம் நாட்டில் குடி நீர் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. இருப்பினும் தேசிய குடி நீர் ஆணையம் எல்லா மாநில அரசுடன் இணைந்து குடிநீர் விநியோக நிர்வாகம் செய்து வருகிறது.

40 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப் படாமல் இருக்கிறது. ஆனால் அரசு குடிநீர் கட்டணம் உயர்த்த வேண்டிய கட்டாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

இருப்பினும் B 40 பிரிவை சேர்ந்த குடி மக்களுக்கு , இக் கட்டண உயர்வு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.  அவர்கள்  இ காசேவின்  கீழ் கட்டண கழிவு வழங்கப்படும் என்று  அமைச்சர் உறுதிமொழி கொடுத்தார்.

இவ்விவகாரம் குறித்து விரைவில் அமைச்சு மற்றும் அமைச்சரவை நாட்டு மக்கள் மற்றும் அரசு நலன் கருதி முடிவு எடுக்கும் என்று அமைச்சர் நிக் நஸ்மி கூறினார்.

தீபாவளி திறந்த சிறப்பு உபசரிப்பில் கலந்து  கொள்வதற்கு முன்பு அமைச்சர் நிக் நஸ்மி, சார்ஸ் சந்தியாகோ மற்றும் ஊடகவியலாளர்கள்.


Pengarang :