ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிளாந்தான் வெள்ளத்தில் 18 மாத ஆண் குழந்தை முதல் பலி.

கோத்தா பாரு, நவ. 26:, இந்த முறை கிளாந்தானில் உள்ள  கம்பங் கெனாரிக்கு அருகில், 18 மாத ஆண் குழந்தை பலி.  இன்று மதியம் 12.17 மணியளவில், தனது வீட்டிற்கு அருகே உள்ள ஆற்றில் மூழ்கி இறந்தது.

கிளாந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹருனைத் தொடர்பு கொண்டபோது, சம்பவத்தை உறுதிசெய்து, பாதிக்கப்பட்டவரின் உடல், மேல் நடவடிக்கைக்காக இங்குள்ள யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா மருத்துவமனை, குபாங் கிரியனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்றார்.

இதற்கிடையில், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் (ஜேபிபிஎம்) ஒரு அறிக்கையில், குழந்தை விழுந்ததாக அறிவிக்கப்பட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட நீர் மீட்புக் குழுவினர் (பிபிடிஏ) மதியம் 1.40 மணி அளவில் பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டுபிடித்ததாக அறிவித்தது. .

“அறிவிப்புகளின் படி, பாதிக்கப் பட்டவர் வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்  வழுக்கி ஆற்றில் விழுந்தார் என்றது.

“பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக  மருத்துவ வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. மற்றும் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம்  சடலம் ஒப்படைக்கப்பட்டது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :