MEDIA STATEMENTNATIONAL

உணவு வியாபாரியை கத்தியால் குத்திய வாடிக்கையாளருக்கு போலீஸ் வலை வீச்சு

ஈப்போ, டிச 3- உணவு விற்பனையாளரை வயிற்றில் கத்தியால் குத்திக் காயப்படுத்திய அடையாளம் தெரியா நபரை போலீசார் தேடி வருகின்றனர். இங்கு தாமான் செமெர்லாங் ராப்பாட்டில் உள்ள உணவகம் ஒன்றில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.

நேற்று அதிகாலை 6.00 மணியளவில் அந்த உணவகத்திற்கு வந்த அடையாளம் தெரியாத வாடிக்கையாளர் அதன் அந்த விற்பனையாளரின் வயிற்றில் கத்தியால் குத்தியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா ஹசான் கூறினார்.

பாதிக்கப்பட்ட 44 வயதுடைய அந்த நபர் அந்த உணவகத்தில் மீ விற்பனை செய்து வந்துள்ளார். வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர்  ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரின் உடல் நிலை சீராக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கத்தியைக் கொண்டு காயம் விளைத்தது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 05-2542222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த மீ வியாபாரியிடம் உரையாடிக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் திடீரென அவரின் வயிற்றில் கத்தியால் குத்துவதை சித்தரிக்கும் சி.சி.டி.வி காட்சிகள் சமூக ஊடங்களில் பரவலாக பகிரப்பட்டன.


Pengarang :