MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் சுல்தானின் பிறந்த நாளில் 97 பேருக்கு மரியாதை பட்டங்கள்.

ஷா ஆலம், டிச. 10 – சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இத்ரிஸ் ஷா வின் 78 வது பிறந்தநாளையொட்டி, மொத்தம் 97 நபர்களுக்கு மாநில விருதுகள், மற்றும் பதக்கங்கள் நாளை  வழங்கப்படும்.

சிலாங்கூர் மாநில செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் கூறுகையில், இரண்டு நபர்களுக்கு டர்ஜா கெராபாட் யாங் அமாட் டிகோர் மாத்தி (டி.கே.) மற்றும் டர்ஜா கெராபாட் சிலாங்கூர் யாங் அமாட் டிஹோர்மாத்தி (கிளாஸ் கெடுவா) (டி.கே. II) விருதுகள் வழங்கப்படும்.
“மூன்று நபர்கள் ஸ்ரீ படுகா மஹ்கோத்தா சிலாங்கூர் (எஸ்.பி.எம்.எஸ்.) விருதைப் பெறுவார்கள், இது ஆண்களுக்கான “டத்தோஸ்ரீ” என்ற பட்டத்தையும் பெண்களுக்கான “டத்தின் பாடுகா ஸ்ரீ ” என்ற பட்டத்தையும் கொண்டுள்ளது.
“இரண்டு நபர்களுக்கு டத்தோ செத்தியா-சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா (எஸ்.எஸ்.ஐ.எஸ்.) விருது வழங்கப்படும், இது ஆண்களுக்கான “டத்தோ செத்தியா” என்ற பட்டத்தையும் பெண்களுக்கான “டத்தின் பாடுகா செத்தியா” என்ற பட்டத்தையும் கொண்டுள்ளது,” என்று அரண்மனை  அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.                                                                                                                                      .
ஒன்பது நபர்கள் டர்ஜா கெபெசாரான் – டத்தோ படுகா மஹ்கோத்தா சிலாங்கூர் (டி.பி.எம்.எஸ்.) விருதைப் பெறுவார்கள் என்று ஹரிஸ் கூறினார், இது ஆண்களுக்கான “டத்தோ” என்ற பட்டத்தையும் பெண்களுக்கான “டத்தின் பாடுகா” என்ற பட்டத்தையும் கொண்டுள்ளது.

“பதின்மூன்று நபர்கள் டர்ஜா கெபெசாரான் டத்தோ-சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா (டி.எஸ்.ஐ.எஸ்.) விருதைப் பெறுவார்கள், இது ஆண்களுக்கான ‘டத்தோ’ மற்றும் பெண்களுக்கான ‘டத்தின் பாடுகா’ என்ற பட்டத்தையும் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
சுல்தான் ஷாராபுடின் 15 பெறுநர்களுக்கு டர்ஜா கெபெசரான்-செத்தியா மஹ்கோத்தா சிலாங்கூர் (S.M.S) விருதையும் வழங்குவார், மேலும் 13 பேருக்கு  டர்ஜா கெபெசாரான்  செத்தியா – சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா (S.I.S) விருது வழங்கப்படும்.
மொத்தம் 15 தனிநபர்கள் டர்ஜா கெபெசாரான் அஹ்லி மஹ்கோத்தா சிலாங்கூர் (ஏ.எம்.எஸ்) விருதைப் பெறுவார்கள், மேலும் 16 பேருக்கு டர்ஜா கெபெசாரான் அஹ்லி-சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா (ஏ.ஐ.எஸ்) வழங்கப்படும்.
“இரண்டு நபர்களுக்கு பிந்தாங் கெசெமர்லாங்கான் சுக்கான் சிலாங்கூர் விருதும், ஏழு பேருக்கு பிந்தாங் பெர்கிட்மாத்தன் செமர்லாங் (பிபிசி) பதக்கமும் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

டத்தோ ஹரிஸ் மாநில அரசு  2,762  விண்ணப்பங்களை பெற்றதாகவும், அவற்றில் 1,032  மாநில விருதுகள் மற்றும் கௌரவங்களுக்காகும்.
ராயல் மலேசியா போலீஸ் (பாதுகாப்பு மற்றும் குற்றம்), மலேசிய திவால் நிலைத் துறை மற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் நடத்திய திரையிடல்களில் 97 நபர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


Pengarang :