ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தாய்மார்களுக்கு  சொந்த தொழில் செய்வதற்கான பயிற்சி

செய்தி சு.சுப்பையா

கோத்தா கெமுனிங்.டிச.10- கோத்தா கெமுனிங் சட்ட மன்றத்தில் உள்ள இந்திய தாய்மார்களுக்கு  வீட்டிலிருந்தே கூடுதல் வருமானம் ஈட்ட பயிற்சிகள் நடத்தப் படுகின்றன.  இத்தொகுதியின் இந்திய சமுதாயத் தலைவர் (kki ) கோபி முனியாண்டி  இப்பயிற்சியை சிறப்பாக நடத்தினார்.

இது வரையில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத்தில்  தான்  6 பயிற்சிகளை நடத்தியுள்ளார். ஒவ்வொரு பயிற்சியிலும் குறைந்தது 40 தாய்மார்கள் கலந்து கொண்டு வருவதாக கூறினார்.

இன்றைய   பயிற்சியில்  கலந்து கொண்ட  30 பேர் எல்லாப் பயிற்சிகளிலும் பங்கு பெற்று சொந்த தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தனித்து வாழும் தாய்மார்களும் அடங்குவர். கோலம் போடுதல், மாலை பின்னுதல், கேக் செய்வது, இனிப்பு பலகாரங்கள் ( பிஸ்கட் ) போன்றவற்றை வீட்டில் இருந்து செய்து வருகின்றனர்.  இதனால்  கடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது அதிகமான வியாபார வாய்ப்புகள் அவர்களுக்கு  கிடைத்தாக கூறுகின்றனர்..

தோசை மாவு, இட்லி மாவு போன்றவற்றையும் தயார் செய்து விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

சிலர்  வடை, பிஸ்கட், கேக், கப் கேக், மீ, மீகூன் பிரட்டுதல், விழாக் காலங்களில் கோலம் போடுதல், மருதாணி போடுதல் போன்ற சேவைகளை வழங்கி வருகின்றனர்.  இவர்கள் தற்போது மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரி.ம. 200.00 முதல் ரி.ம. 2,000.00 வரை சம்பாதித்து வருகின்றனர்.

கேக், கப் கேக், பிஸ்கட்  செய்யும் பயிற்சியை கிள்ளான் பண்டார் புத்ரியில் உள்ள சசி- சீலா தம்பிதிகள் வழி நடத்தி வருகின்றனர். அவர்கள் கேக் கடையை பண்டார் புத்ரியில் நடத்தி வருகின்றனர்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், பயிற்சியில் கலந்து கொண்டு அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.


Pengarang :