ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

லங்காவி கடலில் மூழ்கிய ஆடவரின் சடலம் மீட்பு

அலோர் ஸ்டார், டிச. 17- லங்காவியில் உள்ள தஞ்சங் ரூ கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை  மூழ்கி இறந்ததாகக் கருதப்படும் ஆடவர் ஒருவரின் சடலம் நேற்று  கண்டுபிடிக்கப் பட்டது.

இச்சம்பவத்தில்  பலியானவர் லங்காவியிலுள்ள நகைக்கடையில் பணி புரிந்து வந்த  முகமது கைரி ஷாரி (32) என்று அடையாளம் காணப்பட்டதாக லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷரிமான் அஸ்ஹாரி கூறினார்.

கைரியின் உடல் அவர் நீரில் மூழ்கியதாக நம்பப்படும் இடத்திலிருந்து 250 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.  அவரின் தாயார்  உடலை அடையாளம் காட்டினார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக லங்காவி சுல்தானா மலிஹா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என ஷரிமான் குறிப்பிட்டார்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசியக் பொது தற்காப்புப் படை மற்றும் மலேசியக் கடல்சார் அமலாக்க நிறுவனம், காவல் துறையைச் சேர்ந்த 46 உறுப்பினர்களை  உள்ளடக்கிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இரவு 7.05 மணிக்கு நிறைவடைந்தது என்று  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று முன்தினம் மாலை 6.16 மணியளவில் தஞ்சோங் ரூ கடற்கரையின்  அருகே நடுக்கடலில் உதவிக்காக ஒருவர் போராடுவதைக் கண்ட பொது மக்கள்  போலீசாருக்கு  உடனடியாக  தகவல் கொடுத்ததாக  பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.


Pengarang :