ECONOMYMEDIA STATEMENTNATIONAL

800 எஸ்.பி.எம் மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு மித்ரா நடத்தியது

செய்தி சு.சுப்பையா
கோலாலம்பூர். டிச.17-  இந்திய சமுதாய எஸ்.பி.எம் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு மித்ரா ஏற்பாடு செய்திருந்தது. சுமார் 800 மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இந்த கருத்தரங்கை முடித்து வைத்து உரையாற்றினார் துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்.

கல்வியில் நமது சமுதாய மாணவர்கள் வெற்றி நடை போட வேண்டும் என்பதே எனது நோக்கம். அவர்களுக்கு மித்ராவின் வழி பொருளுதவி செய்துள்ளோம்.

இந்த சிறப்பு கருத்தரங்கை ES டியூசன் நிறுவனம் ஏற்பாடு செய்தது. சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசத்தில் இருந்து 800 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த டியூசன் நிறுவனத்தின் உரிமையாளர்கள் டத்தோ ஈஸ்வரன் பெருமாள் அவர்களின் சேவையை டத்தோ ரமணன் வெகுவாக பாராட்டினார்.

எஸ்.பி.எம் தேர்வு மிக முக்கியமானது. இத்தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். உயர்ந்த இலட்சியத்தோடு மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்று தமது மாணவ பருவத்தில் தாம் கற்ற கல்வியை மேற்கோள் காட்டி பேசினார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் மித்ரா தலைமை நிர்வாகி ரவீந்திரன் நாயர், கூட்டரசு பிரதேச கல்வி இலாகா அதிகாரி ஜானகி மணி, டத்தோ அன்புமணி பாலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Pengarang :