MEDIA STATEMENTNATIONAL

50க்கும் மேற்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்  மூன்று ரோஹிங்கியாக்களை போலீசார் சுட்டுக் கொன்றனர்

கோலாலம்பூர், 23 டிச. : இங்குள்ள செலாயாங் ஜெயாவில் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று ரோஹிங்கியா குற்றவாளிகள், ஆறு மாநிலங்களில் 50 க்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ‘கேங் ரண்டாவ் ஃபீஸ்டா’ என
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் 30 வயதுக்குட்பட்ட மூன்று குற்றவாளிகளும் 2011 ஆம் ஆண்டு முதல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர்களில் ஒருவர் இந்தக் குழுவின் தலைவர் என்று நம்பப்படுபவர், சிறையில் அடைக்கப் பட்டிருப்பதாகவும் கூறினார். அவர்  2016 முதல் 2017 வரை தண்டனை அனுபவித்து விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு முன், ரோந்துப் பணியில் இருந்த போலீசார்,  செலாயாங் ஜெயாவில் சந்தேகத்திற்கிடமான   ஃபோர்டு ஃபீஸ்டா  காரைக் கண்டதாகவும்,  அவர் கூறினார்.

“காவல்துறையினர் அந்த காரை சோதனையிட முயன்ற போது, ​​சந்தேக நபர் காவல்துறையினரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார், ஆனால் அந்தத் துப்பாக்கி குண்டுகள்  எங்கள் உறுப்பினர்களைத் தாக்கவில்லை. பின்னர் போலீசார் 3 சந்தேக நபர்களை நோக்கி 7 முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர்” என்று கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

வாகன சோதனையின் விளைவாக, இரண்டு ரிவால்வர் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கத்தியையும் போலீசார் கண்டு எடுத்தனர்.

சம்பவத்தின் போது அனைத்து சந்தேக நபர்களும் பத்து மலை மற்றும் பாசார் போரோங் சிலாங்கூர் ஆகிய இடங்களில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக சென்று கொண்டிருந்ததாக விசாரணையில் கண்டறியப் பட்டதாகவும் ஹுசைன் கூறினார்.

அவரது கூற்றுப்படி, சிலாங்கூர் தவிர, இக்குழு மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், பகாங் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் கொள்ளை மற்றும் வழிப்பறிகளில்  ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது, மேலும் சிலாங்கூரில் மட்டும் 27 கொள்ளைச் சம்பவங்களில் குழு ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பத்தாங்காலியில்  RM1.3 மில்லியன்  மதிப்புள்ள திருட்டில் சம்பந்தப்பட்டது. அது அவர்களின்  “சமீபத்திய சம்பவம்! அங்கு உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து மூன்று ரோலக்ஸ் கை கடிகாரங்கள்  மற்றும் இரண்டு ஹுப்லட் கடிகாரங்களை திருடியதில் RM445,000 இழப்பு ஏற்பட்டது” என்று அவர் கூறினார்.

நகைகள் மற்றும் ஆடம்பர கடிகாரங்கள் போன்ற சிறிய மற்றும் எளிதில்  விற்க கூடிய கூடிய ஆடம்பரப் பொருட்களை  களவாடுவது குழுவின் செயல்பாடாகும் என்று ஹுசைன் கூறினார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் வாங்குபவரைக் கண்டுபிடிக்க பத்துமலை மற்றும் செலாயாங்கைச் சுற்றியுள்ள சந்தேக நபரின் வசிப்பிடத்தை போலீசார் இப்போது தேடி வருவதாக அவர் கூறினார்.

“இந்தக் குழுவில் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்களா என்பதையும் நாங்கள் கண்டறிந்து வருகிறோம், மேலும் குற்றவியல் சட்டம் பிரிவு 307 இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


Pengarang :