SELANGOR

இரும்பு தடுப்புகளைப் பொருத்தும் இரண்டாம் கட்டப் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது

கோலாலம்பூர், ஜன 3: ஜாலான் வாவாசான் 3/9, தாமான் வாவாசான், பூச்சோங்கில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தில் இரும்பு தடுப்புகளைப் பொருத்தும் இரண்டாம் கட்டப் பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

நேற்று பிற்பகல் நிலவரப்படி, மண் நகர்வு ஏற்படாமல் இருக்க, முதல் கட்ட நடவடிக்கையில் பொருத்திய 375 இரும்பு தடுப்புகள் உட்பட மொத்தம் 590 இரும்பு தடுப்புகள் பொருத்தப் பட்டுள்ளது என செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் அன்பழகன் கூறினார்.

“இந்நடவடிக்கை இரண்டு வாரங்களில் ஒப்பந்த நிறுவனத்தால் முடிக்கப்படும், ஆனால் அது தற்போதைய வானிலையைப் பொறுத்தது” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

இதற்கிடையில், அண்மைக்காலமாக அடிக்கடி மழை பெய்த போதிலும், அப்பகுதியில் மண் அரிப்பு எதுவும் ஏற்படவில்லை.

அப்பகுதியில் உள்ள ஒன்பது வீடுகளில் வசித்த வந்த மொத்தம் 29 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் ஏற்பட்ட நிலச் சரிவைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற உத்தரவிடப் பட்டனர்.

– பெர்னாமா


Pengarang :