MEDIA STATEMENTNATIONAL

நாட்டை தனித்துவமாக்கும் பன்முகத்தன்மைக்கு தமிழ் சமூகம் முக்கிய பங்களிக்கிறது- அமைச்சர் கோபிந்த் சிங்  பொங்கல் வாழ்த்து

புத்ரா ஜெயா, ஜன 14- இந்த மகிழ்ச்சியான தைப்பொங்கல் திருநாளில், டிஜிட்டல் துறை அமைச்சர் .கோபிந்த் சிங் டியோ , ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல், அபரிமிதமான அறுவடையைக் குறிப்பது மட்டுமல்லாமல், நன்றியுணர்வு மற்றும் ஒற்றுமையின் உணர்வையும் குறிக்கிறது.

ஏராளமான பயிர்களுக்கு நன்றி தெரிவிக்கவும்  இயற்கையின் ஆசீர்வாதங்களைக் கொண்டாடவும் குடும்பங்கள் ஒன்று கூடும் நேரம் இது.

தித்திக்கும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “நமது தேசத்தின் பன்முக கலாச்சார சீர்வரிசையில், நமது நாட்டை தனித்துவமாக்கும் செழுமையான பன்முகத்தன்மைக்கு தமிழ் சமூகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.

தைப்பொங்கல் தமிழ் சமூகம் பாதுகாத்து நம் அனைவருடனும் பகிர்ந்து கொண்ட துடிப்பான கலாச்சார பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்கு ஒரு சான்றாகும்.

இந்த மங்களகரமான நிகழ்வைக் கொண்டாடுவதற்கு நாம் கைகோர்க்கும்போது, தைப்பொங்கல் உள்ளடக்கிய நன்றியுணர்வு, நெகிழ்ச்சி மற்றும் சமூகத்தின் மதிப்புகளைப் பற்றியும் சிந்திப்போம்.

சமூகத்திற்குள் ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்த, நமது தேசத்தின் செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட பொங்கலின் சுவை  நம்மை ஊக்குவிக்கட்டும்.

எனவே இன்றும் வரும் நாட்களிலும் பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும்  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்,

மேலும் ஒரு நல்ல ஆண்டாக அமையட்டும்  அனைவருக்கும்.  தைப்பொங்கல் வாழ்த்துகள்!


Pengarang :