MEDIA STATEMENTNATIONAL

நான்கு போலீஸ்காரர்கள் கைது விவகாரம்- உடற்கூறாய்வு அறிக்கைக்கு காவல் துறை காத்திருக்கிறது

கோலாலம்பூர், ஜன 16- இம்மாதம் 4ஆம் தேதி  தெத்தும் நீரைப் பதப்படுத்தி விநியோகித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  நான்கு ளோலீஸ்காரர்கள் மீது   வழக்குத் தொடரும் முன் உடற்கூறாய்வு  அறிக்கைக்காக காவல்துறை காத்திருக்கிறது.

உடற்கூறாய்வு அறிக்கை கிடைக்க இன்னும்  இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகலாம் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது  வழக்குத் தொடர முடியுமா என்பதை தீர்மானிக்க உடறாகூறாய்வு அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.  கட்டொழுங்கைப்  பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து விட்டோம். அதாவது  சம்பந்தப்பட்ட நான்கு காவல்துறை  உறுப்பினர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

இன்று ஜாலான் ராஜா லாவுட்,  பத்து ஆண்கள் தேசியப் பள்ளியில் நடைபெற்ற ‘மீண்டும் பள்ளிக்குச் திரும்புவோம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

பிரிக்பீல்ட்ஸில் உள்ள வீடொன்றில் கெத்தும் நீரை பதப்படுத்தி விநியோகித்த  சந்தேகத்தின் பேரில் ஆறு போலீஸ்கார்கள்  உட்பட ஏழுவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் முன்னர் தெரிவித்திருந்தன.

இருப்பினும், சம்பந்தப்பட்ட ஆறு உறுப்பினர்களில் இருவர் விடுவிக்கப்பட்டனர்.  1952ஆம் ஆண்டு விஷச் சட்டத்தின்  பிரிவு 30 (3) இன் கீழ் விசாரணைக்கு உதவ அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.


Pengarang :