ANTARABANGSA

சிங்கை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு

சிங்கப்பூர், ஜன 18 – சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர்
எஸ்.ஈஸ்வரனுக்கு எதிராக ஊழல் மற்றும் அரசாங்கம் பணியாளர் என்ற
முறையில் விலைமதிப்புள்ள பொருள்களைப் பெற்றது உள்பட பல்வேறு
குற்றச்சாட்டுகள் இன்று சுமத்தப்பட்டன.

தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அனைத்து 27 குற்றச்சாட்டுகளையும்
ஈஸ்வரன் மறுத்து விசாரணை கோரியதாக உள்நாட்டு ஊடகத் தகவல்கள்
கூறுகின்றன.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரு குற்றச்சாட்டுகளையும் நீதித் துறைக்கு
இடையூறாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டையும் அரசு பணியாளர் என்ற
முறையில் விலைமதிப்புள்ள பொருள்களைப் பெற்றதாக 24
குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்கியுள்ளார்.

அரசாங்க அமைச்சர் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தி சொத்துடைமை
செல்வந்தரான ஓங் பெங் செங்கிடம் 145,534 சிங்கப்பூர் டாலரை
லஞ்சமாகப் பெற்றதாக ஈஸ்வரனுக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டி
கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் ஒப்பந்த
தில் ஓங்கின் வர்த்தக நலனுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக அந்த
லஞ்சப் பணம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் ஜிபி பந்தய உரிமையை ஓங் வைத்துள்ளதோடு சிங்கப்பூர்
ஜிபி பந்தயத்தை பிரபலப்படுத்தும் அமைப்பின் தலைவராகவும் ஓங்
இருந்து வருகிறார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொர்மூலா 1 கிராண்ட் பிரிக்ஸ்
போட்டியை காண்பதற்குப் பத்து கிரீன் ரூம் டிக்கெட்டுகளை லஞ்சமாகப்
பெற்றதாகவும் ஈஸ்வரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.


Pengarang :