ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொங்கல் திருநாளின் மகத்துவத்தை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்- டாக்டர் குணராஜ் வேண்டுகோள்

கிள்ளான், ஜன 20- உழவர் திருநாளான தைப்பொங்கலின் மகத்துவம் மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.
தமிழர்களின் பாரம்பரியத்தையும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் இந்த திருநாள் நமக்கு எவ்ளவு முக்கியமானது என்பது மாணவர்கள் அறிந்திருப்பது அவசியம் என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள செந்தோசா தமிழ்ப்பள்ளியில் இன்று நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.
பொங்கல் திருநாள் குறித்த புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த விழாவை பள்ளியில் நடத்தும் இளைஞர் மணி மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.
இந்து, கிறிஸ்து, இஸ்லாம் என மத பேதமின்றி அனைத்து சமயங்களைச் சேர்ந்த மக்களாலும் கொண்டாடப்படும் விழாவாக இந்த பொங்கல் விழா விளங்குகிறது என்றும் குணராஜ் குறிப்பிட்டார்.
வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைவதை பொங்கல்  திருநாள் லட்சியமாக கொள்ளும்படி  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
வாழ்க்கையில் உயரிய நிலையை அடைவதை நாம் லட்சியமாக கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சிதான் சமுதாயத்தின் வளர்ச்சியாக மாறும். ஆகவே, சிறப்பான எதிர்காலம்தான் நமது லட்சியம் என்பதை இந்த பொங்கல்  திருநாள் குறிக்கோளாக நாம் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளரும் சிலாங்கூர் மாநில தமிழ் இளைஞர் மணி மன்றச் செயலாளருமான கே.கணேஷ், மாணவர்களும் பெற்றொர்களும் இணைந்து கொண்டாடும் வகையில் இந்த பொங்கல் விழாவுக்கு தாங்கள் ஏற்பாடு செய்ததாக க் கூறினார்.
இந்நிகழ்வில் செந்தோசா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர தமிழரசு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்கராஜா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Pengarang :