Penguat kuasa KPDNHEP Selangor mengeluarkan kompaun ke atas sebuah kedai di Kuala Kubu Bharu pada 27 April 2020. Foto ihsan KPDNHEP
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தாய்லாந்திற்கு சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை  கடத்திய  இருவர் கைது

தனா மேரா, ஜனவரி 20:  மலேசியாவிலிருந்து  தாய்லாந்திற்கு  சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரையை  கடத்த முயன்ற   இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

20 மற்றும் 30 வயதுடைய இரண்டு வேலையில்லாத ஆண்களை இரவு 9 மணியளவில் கம்போங் பத்து காஜாவில் ரோந்து கார் பிரிவு (எம்பிவி) உறுப்பினர்கள் கைது செய்ததாக தனா மேரா மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்ரண் முகமட் ஹக்கி ஹஸ்புல்லா தெரிவித்தார்.

“சந்தேகத்திற்கு இடமான காரில் இருந்த இரு  நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். “அந்த காரில் சோதனையிட்டதில் 510 கிலோகிராம் (கிலோ) எடையுள்ள 30 பாக்கெட் சமையல் எண்ணெய் பெட்டிகள் மற்றும் RM5,500 மதிப்புள்ள 720 கிலோ வெள்ளை சர்க்கரை கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்திற்கு அருகில் உள்ள மலேசியா – தாய்லாந்து  எல்லை வழியாக கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள்  கடத்த முயன்றது,  விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

சிறுநீர் ஸ்கிரீனிங் சோதனையில் சந்தேகத்திற்குரிய இருவருக்குமே மெத்தம் பேட்டமைன் இருப்பது கண்டறியப்பட்டது என்றும், ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 15 (1) (a) இன் கீழ் விசாரணைகளுக்கு உதவ சந்தேக நபர்கள் இருவரும் இன்று தொடங்கி ஜனவரி 23 வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

“பிடிக்கப்பட்ட பொருட்கள் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்திடம் (KPDN) Tanah Merah பின்தொடர் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.


Pengarang :