ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கம்பம் பூங்கா ராயா  நீண்ட வீடு பிரச்சனை தீர்வு காண்பது   குடியிருப்பாளர்கள் கைகளில்

செய்தி சு.சுப்பையா

கிள்ளான்.ஜன.20-   கடந்த 30 ஆண்டுகளாக முறையாக தீர்வு காண படாமல் இழுபறி நிலையில் இருந்தது வரும் கம்போங்  பூங்கா ராயா ருமா பாஞ்சாங் வீட்டு பிரச்சனை. அது பல்வேறு வழக்குகளை சந்தித்து   விட்டது.

இப்பொழுது இந்த  பிரச்னைக்கு தீர்வு அங்கு குடியிருக்கும் இந்தியர்களின் கைகளில் உள்ளது.  இந்தியர்கள் சம்பந்தப் பட்ட பிரச்சனை என்பதால் இதில் தலையிட்டு நல்ல தீர்வுக்கு வித்திட்டுள்ளார்   மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு.

சிலாங்கூரில் உள்ள வீட்டு பிரச்சனையில் மிக நீண்ட காலம் இழுபறியாக இருந்த, இந்த ரூமா பாஞ்சாங் பிரச்சனை சமீபத்தில் வலைத்தளங்களில் பரவலாக பகிறப்படும் செய்தியாகியது.  1993 ஆம் ஆண்டில் 18 மாத காலத்தில் புதிய வீடு தருகிறோம் என்ற வாக்குறுதியுடன்  74 இந்திய குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்பட்டனர்.

ஆனால் இப்பிரச்சனைக்கு முறையாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்ததால்  அவர்களை  அங்கிருந்து வெளியேற்ற  அங்குள்ள மேம்பாட்டாளர் நீதிமன்ற  உத்தரவை  பெற்றார். இதனால் இந்த விவகாரத்துக்கு  தீர்வு காண  கடந்த வாரத்தில் குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகள், மாநில வீட்டு வாரியம், கோத்தா டமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இசூவான் காசிம், சுங்கை பூலோ பி.கே.ஆர். தொகுதி தலைவர் சிவராசா ஆகியோரை அழைத்து   சந்திப்பு கூட்டத்தை நடத்தினார் பாப்பா ராய்டு.

அதன் பிறகு சிலாங்கூர் மாநில வீட்டு வாரியம் சிலாங்கூரில்  குறிப்பாக அவ்வட்டாரத்தில் காலியாக இருக்கும் வீடுகள் கொண்ட பட்டியலை தயாரித்து கொடுத்து விட்டது. எந்த இடத்தில் உள்ள வீடுகள் தங்களுக்கு வேண்டும் என்று முடிவு எடுக்கும்  அதிகாரம்,  ரூமா பாஞ்சாங் மக்களின் கைகளில் தான் இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக சொந்த வீடு கிடைக்காமல் இருந்தவர்களுக்கு சொந்த வீடு கிடைக்க வேண்டிய தீர்வை பாப்பா ராய்டு வெற்றிகரமாக செய்து விட்டார்.

எந்த இடத்த்தில் உள்ள வீடு தங்களுக்கு வேண்டும் என்ற இறுதி முடிவை அவ்வட்டார மக்களின் கையில் தற்போது இருக்கிறது என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் நேற்று கிள்ளானில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவில் கலந்துக் கொண்ட போது சிலாங்கூர் இன்று பிரத்தியேகமாக கேட்ட போது இவ்விவரத்தை பாப்பா ராய்டு தெரிவித்தார்.


Pengarang :