ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தால்  வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை சரவாக்கில்  உயர்கிறது, ஜோகூர் மாற்றமில்லை

கோலாலம்பூர், ஜனவரி 21 – சரவாக்கில் வெள்ளத்தால் வீடுகளில்  இருந்து வெளியேற்றப் பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 444 பேருடன் ஒப்பிடுகையில் இன்று காலை 459 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்  வெளியிட்டுள்ள சமீபத்திய பேரிடர் அறிக்கையின்படி, மொத்தம் 120 குடும்பங்களைச் சேர்ந்த 404 பேர் பெத்தோங்கில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும் 27 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பிந்துலுவில் உள்ள ஒரு மையத்தில் தஞ்சமடைந்துள்ளனர் .

ஜோகூர், செகாமாட்டில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை, 19 குடும்பங்களில் இருந்து 65 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நீர்ப்பாசன மற்றும் வடிகால் திணைக்களம் தொலைத்தொடர்பு நிலையத்தின் அவதானிப்புகள், சுங்கை ஜொகூர் (கோத்தா திங்கி, ஜொகூர்), சுங்கை கெடா (கோத்தா ஸ்டார், கெடா), சுங்கை ஆராவ் (ஆராவ், பெர்லிஸ்) மற்றும் சுங்கை திரங்கானு (உலு திரங்கானு) ஆகிய  ஆறுகள் அபாய நிலையில் இருப்பதாக காட்டுகின்றன.

இதற்கிடையில் பேராக்கின் உலு பேராக்கில் உள்ள ஜாலான் ராயா தீமோர் பாராட் உட்பட வெள்ளத்தால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 18 சாலைகள் மூடல் பட்டுள்ளதாகவும் நட்மா கூறியது; டுங்குன், திரங்கானுவில் ஜாலான் புக்கிட் பிசி-டுங்குன் மற்றும் சிலாங்கூரின் கோலா லங்காட்டில் உள்ள ஜாலான் புக்கிட் ஜுக்ராவும் அதில் அடங்கும்.


Pengarang :