ECONOMYNATIONALPENDIDIKAN

கித்தா சிலாங்கூர் புத்தக வவுச்சர்: RM200,000 ஒதுக்கீட்டில் 80 சதவீதத்திற்கும் மேல் பட்டுவாடா செய்யப்பட்டது

ஷா ஆலம், ஜன. 27 – கித்தா சிலாங்கூர் புத்தக மின்-வவுச்சர்களுக்காக மாநில அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட RM200,000 இல் தோராயமாக 83.8 விழுக் காட்டினை இன்றுவரை பெற்றுக்கொண்டனர்  என்று மந்திரி புசார் சிலாங்கூர் (கட்டமைப்பு) அல்லது MBI தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் இந்த முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து  வவுச்சர் மதிப்பில் RM 166,360 செலவிடப்பட்டுள்ளதாக அதன் நிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவன தகவல் தொடர்புத் தலைவர் அஹ்மத் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

“எங்கள் பதிவுகளின் அடிப்படையில், 949 மின்-வவுச்சர் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக உள்ளது, அதே நேரத்தில் 542  இன்னும் கொள்முதல் செய்யப்படவில்லை. “தோல்வியுற்ற பரிவர்த்தனைகளுக்கான காரணங்களில் வெளியீட்டாளர்களின் ஒப்புதலுக்காக காத்திருப்பதும், வவுச்சர் பெறுநர்கள் தங்கள் ஆர்டர்களை இறுதி செய்யாததும் அடங்கும்” என்று அவர் நேற்று தொடர்புகொண்டபோது கூறினார்.

ஜனவரி 31 காலக்கெடுவிற்கு முன்னர் தகுதியான மாணவர்கள் தங்கள் மின்-வவுச்சர்களை உடனடியாக மீட்டெடுக்குமாறு அஸ்ரி வலியுறுத்தினார்.

பயன் பெற தகுதியான பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வவுச்சர்களை மீட்டுக்கொள்ளலாம் மற்றும் mall.bookcapital.com.my மூலம் கொள்முதல் செய்யலாம், இது கல்வி அமைச்சின் கீழ் உள்ள பெர்பாடானன் கோத்தா புக்கு நிறுவனத்தால் கையாளப்படுகிறது.

நவம்பர் 6, 2023 அன்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் தொடங்கப்பட்டது, இது 1,000 மாணவர்களுக்கு தலா வெள்ளி 200 வீதம் RM200,000 ஒதுக்கீட்டின் வழி  பயனளிக்கும் ஒரு திட்டமாகும்.


Pengarang :