ANTARABANGSA

ஐ.சி.ஜே.  தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில் காஸாவில் 165 பேர் பலி

அங்காரா, ஜன 29 : முற்றுகையிடப்பட்ட காஸா  தீபகற்பத்தில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும்  தாக்குதல் காரணமாக  கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 165 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும்  290 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு நேற்று  தெரிவித்தது.

காஸா  தீபகற்பத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்  படைகள் 19 பேரைக் கொன்று குவித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 165 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டு, 290 பேர் காயமடைந்தனர்.

மீட்புக் குழுவினர் விரைவில் சென்றடைய முடியாததால்  பல குடியிருப்பாளர்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் இன்னும் சிக்கியுள்ளனர் என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

அனைத்துலக நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு இருந்தபோதிலும்  காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல்  தொடர்கிறது. இதுவரை குறைந்தது 26,422 பாலஸ்தீனர்களைக் கொன்று பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்கள் உள்ளிட்ட  65,087 குடியிருப்பாளர்களைக் காயப்படுத்தியுள்ளது என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இஸ்ரேலிய தாக்குதலால் காஸாவில் 85 சதவீத மக்கள் உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து பற்றாக்குறையை எதிர்நோக்குவதோடு  குடியிருப்புகளையும் இழந்துள்ளனர்.  அதே நேரத்தில் பிரதேசத்தின் உள்கட்டமைப்புகளில் 60 சதவீதம் சேதமடைந்துள்ளது அல்லது அழிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் அமைப்பு   தெரிவித்தது.


Pengarang :