ANTARABANGSA

காஸா போரின் எதிரொலி- 25,000 சிறார்கள் அனாதைகள் ஆனார்கள்

தெஹ்ரான், ஜன 29 – முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலிய
ஆக்கிரமிப்பு படைகள் நடத்தி வரும் கொடூர இனப்படுகொலைத்
தாக்குதல்களின் விளைவாக 25,000 சிறார்கள் அனாதைகள் ஆனதாக ஈரோ-
மத்திய தரைக்கடல் மனித உரிமை அமைப்பு கூறுகிறது. அந்த மனித
உரிமை அமைப்பின் இந்த தகவல் பாலஸ்தீனப் போரின் கோரத்தை
அம்பலப்படுத்துவதாக உள்ளது.

அந்த கடலோரப் பாலஸ்தீனப் பகுதியில் குண்டுவீச்சுத் தாக்குதலை
இஸ்ரேல் கடந்தாண்டு அக்டேபார் 7ஆம் தேதி தொடங்கியதிலிருந்து
காஸாவிலுள்ள சுமார் 25,000 சிறார்கள் பெற்றொர்களில் ஒருவரை அல்லது
இருவரையுமே இழந்துள்ளதாக பாலஸ்தீன சாமா செய்தி நிறுவனத்தை
மேற்கோள் காட்டி ஈரானின் இர்னா செய்தி நிறுவனம் செய்தி
வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களில் இதுவரை 26,422 பேர்
கொல்லப்பட்டதோடு மேலும் 65,087 பேர் காயமடைந்துள்ளதாக காஸா
வெளியுறவு அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.

உயிருடற்சேதங்கள் தவிர்த்து அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள், அகதிகள்
முகாம்கள், மருத்துவமனைகள் மீது மேற்கொள்ளப்படும் இடைவிடாத
தாக்குதல்கள் காரணமாகக் காஸா மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இஸ்ரேலின் இன அழிப்புத் தாக்குதல் தொடங்கி 115 நாட்கள் ஆன
நிலையில் உலக நாடுகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் எதிர்க்கும் சக்தியற்ற
பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிப்பதில் அந்த யூத நாடு தீவிரமாக
ஈடுபட்டு வருகிறது.


Pengarang :