ANTARABANGSA

ஐ.சி.ஜே. உத்தரவை மீறினால் இஸ்ரேல் மீது நடவடிக்கை- அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு எச்சரிக்கை

பிரெசெல்ஸ், ஜன 31-  அனைத்துலக நீதிமன்றத்தில் (ஐ.சி.ஜே.) உத்தரவை பின்பற்றத் தவறினால் இஸ்ரேலிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு எதிராக அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு (ஐ.எஃப்.ஜே.) சட்ட நடவடிக்கை எடுக்கும்.

ஐ.எஃப்.ஜே.வில் உள்ள 600,000 உறுப்பினர்களும் காஸாவில் உள்ள ஊடகவியலாளர்களை தங்களின் தொழில்முறை சகாக்களாக கருதுவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூ மற்றும் தற்காப்பு அமைச்சர் யோவ் கேலண்டிற்கு அனுப்பிய கடிதத்தில் அந்த அமைப்புக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஊடகச் சுதந்திரம், ஊடகவியலாளர் உரிமை மற்றும் ஊடவியலாளர் தனியுரிமைக்கு அனைத்துலக ஊடகவியலாளர் கூட்டமைப்பின் அமைப்புச் சட்டம் உத்தரவாதம் வழங்குகிறது என்று அந்த கூட்டமைப்பு கூறியுள்ளது.

பாலஸ்தீன ஊடகவியலாளர் சங்கத்தினரும் எங்களின் உறுப்பினர்களே. உலக முழுவதும் உள்ள 140 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊடகவியாளர்கள் அனைவரும் பாலஸ்தீன ஊடகவியலாளர்களை தங்களின் தொழில்முறை சகாக்களாக கருதுகின்றனர் அது தெரிவித்தது.

அனைத்துலக இனப் படுகொலை மாநாட்டில் வரையறுக்கப்பட்டுள்ள இனப் படுகொலை உள்ளிட்ட அனைத்து தாக்குதலையும் நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதோடு இந்த இடைக்கால நடவடிக்கைகளின் மேம்பாடு குறித்து ஒரு மாத காலத்தில் அனைத்துலக நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று ஐ.சி.ஜே.அண்மையில் வெளியிட்ட தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

போர் நிகழும் பகுதியில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்களைப் பாதுகாப்பதற்கு தங்களிடம் உள்ள அனைத்து அதிகாரங்களையும் சம்பந்தப்பட்ட நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்று அனைத்துலகச் சட்டம் வலியுறுத்துகிறது.


Pengarang :