SELANGOR

சுபாங் ஜெயா மாநகராட்சி 25 ரம்ஜான் பஜார் தளங்களை தயார்படுத்தி உள்ளது

சுபாங் ஜெயா, பிப் 1: இந்த ஆண்டு 1,560 விற்பனை இடங்களைக் கொண்ட 25 ரம்ஜான் பஜார் தளங்களைச் சுபாங் ஜெயா மாநகராட்சி உருவாக்கி வருகிறது.

இதற்கு முன் ஏற்பட்ட சிக்கலைச் சமாளிக்க ஜாலான் ப்ரிமா 5/4 இடத்திலிருந்து ஜாலான் ப்ரிமா 5/1, தாமான் பூச்சோங் ப்ரிமாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேயர் கூறினார்.

“இந்த ஆண்டு ரம்ஜான் காலம் முழுவதும் 1,167 வர்த்தகர்களுக்கும் மற்றும் வருகையாளர் களுக்கும் வசதியான இடத்தை வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.

“எம்பிஎஸ்ஜே அமலாக்க அதிகாரிகள் மேற்பார்வையில், எல்லாம் சுமூகமாக நடக்கும் என்றும்,வணிகர்கள் மற்றும் வருகையாளர்களுக்கும் நகராண்மைக் கழகத்தின் அறிவுறுத்தல்களுக்கு மதித்து நடப்பார்கள்  என்று நாங்கள் நம்புகிறோம்” என்று எம்பிஎஸ்ஜே தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில், மாநில அரசு மற்றும் எம்பிஎஸ்ஜே ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாடு விதிமுறைகளுக்கு இணங்கி, நடக்க வேண்டி நினைவூட்டுவதற்காக வர்த்தகர்களுடன் ஒரு விளக்கக் கூட்டம் நடத்தப் பட்டதாக அவர் விளக்கினார்.

“ரம்ஜான் மாதத்தில் வணிகம் செய்ய விதிமுறைகளுக்கு இணங்குதல், சிறந்த மற்றும் பயனுள்ள உணவு கையாளுதல், மறுசுழற்சி நடைமுறைகள், கழிவு மேலாண்மை, வளங்களை திறமையாக பயன்படுத்துதல் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றை வலியுறுத்தியது.

“பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வருகையாளர்கள் தங்கள் சொந்த உணவுப் பாத்திரங்களை கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் வணிகர்கள் பஜார் தளத்தில் விற்பனை பொருட்களை நிலையாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :