ANTARABANGSA

தென் லெபனான் மீது இஸ்ரேல் தீவிர வான் தாக்குதல்

பெய்ருட், பிப் 15 – தென் லெபனானின் பல பகுதிகள் மீது இஸ்ரேலிய போர்
விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் கடுமையானத் தாக்குதலை
மேற்கொண்டதாக லெபனானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள்
காட்டி ஷின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனான்-இஸ்ரேல் எல்லையிலிருந்து இருபது கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள நாபாத்தி மற்றும் இக்லிம் அல் துஃபா உள்ளிட்ட தென்
பகுதி நகரங்களை இலக்காகக் கொண்டு சுமார் 15 தாக்குதல்களை
இஸ்ரேலிய போர் விமானங்கள் மேற்கொண்டதாகப் பெயர் குறிப்பிட
விரும்பாத வட்டாரம் ஒன்று கூறியது.

இந்த் தாக்குதலில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்
பாதிக்கப்பட்டவர்களை சிவில் தற்காப்பு படையினரும் லெபனானிய
செஞ்சிலுவை சங்கத்தினரும் தென் லெபானில் உள்ள
மருத்துவமனைகளுக்குக் கொண்டுச் சென்றதாகவும் அரசாங்க மருத்துவ
வட்டாரங்கள் அந்த செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.

இஸ்ரேலிய வட நகரான சாஃபாட் மீது லெபனான் மேற்கொண்ட ராக்கெட்
தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் எழுவர் காயமுற்றதாக
இஸ்ரேலிய அவசர சேவைத் துறை கடந்த புதன்கிழமை கூறியிருந்தது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ்
மேற்கொண்ட திடீர்த் தாக்குதலுக்கு ஆதரவளிக்கும் வகையில் அக்டோபர்
8ஆம் தேதி லெபனான் ஆயுதக்குழுவான ஹெஸ்புல்லா இஸ்ரேல் மீது
டசன் கணக்கான ராக்கெட்டுகளைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து இஸ்ரேல்-
லெபனான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Pengarang :