E-SELANGORKINIMEDIA STATEMENTNATIONAL

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு சந்தை- சிப்பாங்கில் 22ஆம் தேதி நடைபெறும்

ஷா ஆலம்,  பிப் 17-  இம்மாதம் 22ஆம் தேதி  நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு விழாவை முன்னிட்டு  1,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த வேலை வாய்ப்பு  சந்தை சிப்பாங்,  தேசிய இளைஞர் உயர் திறன் கழகத்தின் (ஐ.கே.டி.பி.என்.) டேவான் ஸ்ரீ நீலாமில்  காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

ஆறு முதலாளிகள் பங்கு கொள்ளும் இந்த வேலை வாய்ப்பு சந்தையில் 200 வேலை தேடுபவர்கள் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுவதாக சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின்   வேலை வாய்ப்புச் சேவைக் கிளை கூறியது.

அத்தரப்பினர் பயன்படுத்திக் கொள்வதற்காக 1,000 க்கும் மேற்பட்ட வேலை காலியிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கிடைக்க உதவுவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து சொக்சோ சிலாங்கூர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக அனிஸ் தனது முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

18 முதல் 30 வயது வரையிலான கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேர்காணல் அமர்வில் கலந்துகொள்வதற்கு முன் விண்ணப்பதாரர்கள் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டின் மூலம் முன் பதிவு செய்ய வேண்டும் என்பதோடு
தங்கள் சுயவிபரக் குறிப்பு  மற்றும் கல்விச் சான்றிதழுடன் (ஏதேனும் இருந்தால்)  நேர்காணலுக்கு வர வேண்டும்.


Pengarang :