ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியா கிட்டத்தட்ட 10.07 மில்லியன் 5G சேவை சந்தாக்களைப் பதிவு செய்துள்ளது

கோலாலம்பூர், பிப் 22: ஜனவரி 31 நிலவரப்படி மலேசியா கிட்டத்தட்ட 10.07 மில்லியன் 5G சேவை சந்தாக்களைப் பதிவு செய்துள்ளது, இது மக்கள் தொகையின் 29.9 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இருப்பினும், அனைத்து மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்கள் எதிர்காலத்தில் தங்கள் பயனர்களின் தேவைகளுக்கு அதிக உணர்திறன் மற்றும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“அதிக வேகம் மற்றும் தொழில் நுட்பத்துடன் பொறுப்பும் சேர்ந்து வருகிறது. எனவே, இனிமேல் அனைத்து மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களும், அவரவர் பயனர்களின் தேவைகளுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

“நாம், வேகமான, நம்பகமான மற்றும் மலிவான இணையம் மற்றும் சிறந்த தொழில் நுட்பத்தை வழங்க வேண்டும்,. ஆனால், இது சிறந்த சேவையுடன் வர வேண்டும்,” என்று அவர் தனது உரையில் கூறினார்.

பிப்ரவரி 26 முதல் 28 வரை ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ட் காங்கிரஸ் 2024 (MWC 2024) இல் “Maxis 5G“- மேம்பட்ட சோதனை மலேசிய பெவிலியனின் ஒரு பகுதியாக இருக்கும்.

இதற்கிடையில், மலேசியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் (டெல்கோக்கள்) காங்கிரஸில் பங்கேற்கும், இதில் பல உள்ளூர் நிறுவனங்கள் அடங்கும் என ஃபஹ்மி தெரிவித்தார்.

அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒரே பெவிலியனின் கீழ் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும் என்றார்.

“இது MWC இல் நாட்டின் மிகப்பெரிய வருகையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதிநிதிகள் குழுவில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மற்றும் பிற நிறுவனங்களும் அடங்கும்,” என்று அவர் கூறினார்.

குளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் அசோசியேஷன் (ஜிஎஸ்எம்ஏ) ஏற்பாடு செய்த MWC பார்சிலோனா 2024 இல் பல்வேறு துறைகள், பின்னணியைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து மூத்த அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

ஜிஎஸ்எம்ஏ மந்திரிகளின் கூட்டம்  தொலைத்தொடர்பு துறையில் தற்போதைய பிரச்சனைகளை விவாதிக்கவும், கொள்கை வகுக்கும் ஒரு மன்றமாக செயல்படும்.

ஜிஎஸ்எம்ஏ 2023 பதிப்பில் 151 நாடுகள் மற்றும் 45 சர்வதேச அமைப்புகளின் பங்கேற்பை ஈர்த்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

– பெர்னாமா


Pengarang :