NATIONAL

மலேசியாவில் உள்ள 14 பகுதிகளில் எச்சரிக்கை அளவிலான வெப்பநிலை ஏற்படும்

ஷா ஆலம்,  பிப் 28: தீபகற்ப மலேசியாவில் உள்ள 14 பகுதிகளில் எச்சரிக்கை அளவிலான வெப்பநிலை ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளதில் சிப்பாங்கும் ஒன்று என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

மேலும், லங்காவி தீவு, பாடாங் தெராப், சிக், பாலிங், குபாங் பாசு, கோத்தா ஸ்டார் மற்றும் கெடாவில் உள்ள பெண்டாங் மற்றும் பெர்லிஸ் ஆகிய பகுதிகளில் வெப்பமான சூழ்நிலை நிலவும் என மெட்மலேசியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பினாங்கில் வடக்கு செபராங் பிராய், மத்திய செபராங் பிராய், செபராங் பிராய் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு ஆகிய பகுதிகளிலும் பேராக்கில் உள்ள கோலா கங்சார் மற்றும் சபாவில் பியூஃபோர்டிலும் இதே வானிலை தான் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

“பொக்கோ சேனா, கெடா எச்சரிக்கை அளவில் இரண்டாம் நிலையில் (வெப்ப அலை) உள்ளது” என்று அந்நிறுவனம் நேற்று முகநூலில் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச தினசரி வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் அடையும் போது எச்சரிக்கை நிலை குறிகாட்டி யையும் மெட் மலேசியா அறிவித்துள்ளது.


Pengarang :