ANTARABANGSAMEDIA STATEMENT

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க ஓ.ஐ.சி. அடுத்த வாரம் கூடும்

அங்காரா, மார்ச் 2- பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து விவாதிக்க வரும் மார்ச் 5ஆம் தேதி தாங்கள் சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி.) கூறியது.

இக்கூட்டம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலுள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் நடைபெறும் என்று ஓ.ஐ.சி. அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாக அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.

ஓ.ஐ.சி.யும் அரபு லீக்கும் கூட்டு உச்சநிலை மாநாட்டை கடந்தாண்டு நவம்பர் மாதம் ரியாட் நகரில் நடத்தின. நாடு முழுவதும் உள்ள நாடுகளின் தலைநகரங்களுக்கு வருகை புரிவது மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது உள்ளிட்ட முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

கடந்தாண்டு அக்டேபார்  7ஆம் தேதி முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் இதுவரை 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்கள் ஆவர். இது தவிர அந்நாட்டிலுள்ள கட்டமைப்புகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு கட்டாய இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ள பாலஸ்தீன மக்கள் பட்டினியால் வாடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


Pengarang :