Foto Sumber: Mingguan Wanita
ANTARABANGSA

வங்காளதேசம், ஐக்கிய அரசு சிற்றரசுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி

புதுடில்லி, மார்ச் 5 – வெங்காய ஏற்றுமதி தடையுத்தரவை இந்தியா
மறுஆய்வு செய்துள்ள நிலையில் வங்காளதேசத்திற்கும் ஐக்கிய அரசு
சிற்றரசுக்கும் 64,400 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி
வழங்கியுள்ளது. இந்தியாவின் மத்திய வர்த்தக அமைச்சின் உயர்
அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியதாக ஷின்ஹூவா செய்தி நிறுவனம்
கூறியது.

அவ்விரு ‘நட்பு நாடுகளின்‘ கோரிக்கையின் அடிப்படையில் மேற்கண்ட
இரு நாடுகளுக்கும் அந்த அத்தியாவசிய உணவுப் பொருளை ஏற்றுமதி
செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

உள்நாட்டுச் சந்தையின் தேவையை ஈடு செய்யும் நோக்கில் கடந்தாண்டு
டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை
இந்தியா அமல்படுத்தியது. இந்த தடை எதிர்வரும் மார்ச் மாத இறுதி வரை
அமலில் இருக்கும்.

வங்காளதேசத்திற்கு 50,000 டன் வெங்காயமும் ஐக்கிய அரசு சிற்றரசுக்கு
14,400 டன் வெங்காயமும் ஏற்றுமதி செய்ய வர்த்தக அமைச்சின் கீழுள்ள
வெளி வர்த்தக தலைமை இயக்குநரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.


Pengarang :