MEDIA STATEMENTNATIONAL

சாலை விபத்தில் சிக்கிய யானை பிடிபட்டது- பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடப்படும்

கோல திரங்கானு, மார்ச் 16-  இங்குள்ள செய்தியூவில் உள்ள கம்போங் கோலாமில் நேற்றிரவு கார் விபத்தில் சிக்கிய பெண் யானை  இன்று வெற்றிகரமாக பிடிபட்டது.

இன்று மதியம் 1.00  மணியளவில் செத்தியூ,  தெலாகா பாப்பான் பகுதியில் பெசுட் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தீபகற்ப மலேசிய  தேசிய பூங்கா  (பெர்ஹிலித்தான்) துறையால்  அந்த யானை பிடிக்கப் பட்டதாக செத்தியூ  மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி அஃபாண்டி ஹூசேன் தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு கிராமத்திற்கு அருகில் உள்ள செம்பனை தோட்டப் பகுதியில் அந்த யானை  பிடிபட்டது.

இதற்குப் பிறகு இந்த யானை மனித நடமாட்டத்திற்கு  அப்பால்   உள்ள பேராக் மாநிலத்தின்   கிரீக் அல்லது உலு திரங்கானுவில்  உள்ள வனப் பகுதிகளுக்கு அனுப்பப்படும்  என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

செத்தியூவில் உள்ள கம்போங் கோலாமில் யானை மீது வாகனம் மோதியதில் அதன் ஓட்டுநர்  அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பியதாக ஊடகங்கள் முன்னதாக செர்தி வெளியிட்டிருந்தன.  இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட  ஷாருல் அஸ்மா சே சமோன் (42) என்பவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.  எனினும், நிறுவன மேலாளரான அவர் நபர்  ஓட்டிச் சென்ற போர்ஷே கெய்னின் காரின்  முன்பகுதி, கண்ணாடிகள், பம்ப்பர்,  முன் விளக்குகள் மற்றும் போனட்  ஆகியவை  கடுமையாக  சேதமடைந்தன.

இந்த விபத்து தொடர்பில் நேற்றிரவு 10.15 மணியளவில் செத்தியூ போக்குவரத்து புகார் மையத்தைச் சேர்ந்த காவல்துறை உறுப்பினர் ஒருவருக்கு அழைப்பு வந்தது என்று அவர் சொன்னார்.

அந்த கார் ஓட்டுநர்  ரூ10ல் இருந்து லெம்பா பீடோங்  பள்ளத்தாக்கு நோக்கி சென்று சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Pengarang :