ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ரம்ஜான் சந்தை மீதான  கண்காணிப்பு நடவடிக்கையில்  ஆறு குற்றப் பதிவுகள் வெளியீடு

ஷா ஆலம் மார்ச் 16- சுங்கை பெசார்  ரம்ஜான்   சந்தையில்  சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் மேற்கொண்ட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில்  ஆறு குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன.

வர்த்தக லைசென்ஸ் காலாவதியானது, டைபாய்டு தடுப்பூசி அட்டைகளை வைத்திராதது, உணவில் ஈ முட்டைகள் காணப்பட்டது உள்ளிட்ட  குற்றங்களுக்காக குற்றப் பத்திரிகை வெளியிடப்பட்டதாக அது தெரிவித்தது.

நேற்று மாலை 4.00 மணி முதல் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில்  தடுப்பூசி அட்டை, உணவு கையாளுதல் தொடர்பான பயிற்சி சான்றிதழ்,  உணவு மையம் மற்றும் சுயத் தூய்மை, முறையான குப்பை மேலாண்மை தொடர்பான சோதனைகளும் நடத்தப்பட்டன என மாவட்ட மன்றம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டது.

அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாவதைத் தவிர்க்க நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு மாவட்ட மன்றம் வர்த்தகர்களைக் கேட்டுக் கொண்டது.


Pengarang :