NATIONAL

பெர்லிஸ், பொக்கோ செனாவில் வெப்ப அலை – வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 20 – பெர்லிஸ் மாநிலம் முழுமையிலும் கெடா
மாநிலத்தின் பொக்கோ செனாவிலும் பதிவாகும் இரண்டாம் கட்ட வெப்ப
நிலை காரணமாக இன்று அப்பகுதிகளில் வெப்ப அலை ஏற்படும் என்று
வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

ஓரிடத்தில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு 37 முதல் 40 டிகிரி
செல்சியஸ் வரையிலான வெப்பம் ஏற்படும் போது வெப்ப அலை அல்லது
இரண்டாம் கட்ட நிலை உண்டாகும் என்று அறிக்கை ஒன்றில்
வானிலை ஆய்வுத் துறை கூறியது.

தீபகற்ப மலேசியா முழுவதும் உள்ள 26 இடங்களில் எச்சரிக்கை நிலை
(ஒன்றாம் கட்டம்) பதிவாகியுள்ளது. கெடா மாநிலத்தின் லங்காவி, கோல
மூடா, குபாங் பாசு, பாடாங் தெராப், சிக் பாலிங் ஆகிய பகுதிகளிலும்
பினாங்கின் தீமோர் லாவுட் மாவட்டமும் பேராக் மாநிலத்தில் கம்பார்,
கோல கங்சார், கிந்தா ஆகிய பகுதிகளும் இந்த சீதோஷ்ண நிலையை
எதிர்கொண்டுள்ளன.

பகாங் மாநிலத்தின் பெந்தோங், ரவுப், தெமர்லோ மாவட்டங்களும்
சிலாங்கூரில் கோல சிலாங்கூர் மற்றும் சிப்பாங்கும் முதல் கட்ட வெப்ப
நிலையை பதிவு செய்துள்ளன.

கூட்டரசு பிரதேசத்தின் புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின்
ஜெலுபு, ரெம்பாங், தம்பின் மற்றும் சிரம்பான் ஆகிய பகுதிகளும்
மலாக்காவின் அலோர் காஜா மற்றும் ஜோகூரின் பத்து பகாட், சிகாமாட்
மற்றும் மூவார் ஆகிய பகுதிகளிலும் இந்நிலை நீடிக்கிறது.


Pengarang :