SELANGOR

இளைஞர்களுக்கான இலவச எல்இடி விளக்கு பொருத்தும் பயிற்சி வகுப்பு ஏற்பாடு

ஷா ஆலம், மார்ச் 23: எதிர்வரும் மே மாதம் இளைஞர்களுக்கான இலவச எல்இடி விளக்கு பொருத்தும்   பயிற்சி  வகுப்பை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற சேவை மையம் நடத்தும்.

இளைஞர்கள் சமீபத்திய தொழில்நுட்ப துறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக இந்த வகுப்பு நடத்தப்படுவதாக நாடாளுமன்ற  உறுப்பினர் லீ சீன் சுங் கூறினார்.

“எல்இடி பொருத்தும்   பயிற்சி வகுப்பு தேர்ந்தெடுக்கப் பட்டதன் காரணம் இது ஒரு புதிய தொழில்நுட்பம் ஆகும். இதன் பயன்பாடு மலேசியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது.

“இந்தப் போக்கு அதிக லாபகரமான சம்பளத்தை வழங்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், தொழில் துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் போது அதனை மாற்றும் திறன் கொண்டது.

“எனவே, நாங்கள் Helio Media Sdn Bhd நிறுவனம் மற்றும் PJ Up என்ற அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தனியார் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதில் முக்கியமானது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

மேலும், 25 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்பு மே 11 முதல் மே 19 வரை நடைபெறும் என்றார்.  “இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தேர்வெழுதியதும், நோவா ஸ்டார் அல்லது ஹீலியோ மீடியாவிலிருந்து லெவல் ஒன் சான்றிதழ் பெறுவார்கள் இது சீனா மற்றும் ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் ஆகும்.

“சான்றிதழ் பெறும் மாணவர்கள் எல்இடி நிறுவல் சேவைகளை மேற்கொள்ளவும், ஆலோசனை நிபுணர்களாகவும், பராமரிப்பு சேவை வணிகத்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது,” என்று அவர் கூறினார்.


Pengarang :