NATIONAL

நேற்று வரை 8.09 மில்லியன் தனிநபர்கள் தங்கள் தரவுகளைப் பாடு அமைப்பில் புதுப்பித்துள்ளனர்

ஷா ஆலம், மார்ச் 26: நேற்று வரை நாடு முழுவதும் மொத்தம் 8.09 மில்லியன் தனிநபர்கள் தங்கள் தரவுகளைப் பாடு அமைப்பில் புதுப்பித்துள்ளனர்.

மேலும், 1.26 மில்லியன் எனும் அதிக எண்ணிக்கையிலான பதிவுகளைப் சிலாங்கூர் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜோகூரில் (860,000), சரவாக்கில  (860,000), பேராக்கில் (780,000), சபாவில் (700,000) மற்றும் கெடாவில் (600,000) என பதிவாகியுள்ளன.

மேலும், கிளந்தான், கோலாலம்பூரில் (480,000), பகாங்கில் (450,000), திரங்கானுவில் (390,000), நெகிரி செம்பிலானில் (340,000), மலாக்காவில் (240,000), பெர்லிஸ்யில் (90,000), புத்ராஜெயாவில் (30,000) மற்றும் லாபுவானில் (20,000) என பதிவாகியுள்ளன.

“பாடு அமைப்பில் தகவல்களை வெற்றிகரமாகப் புதுப்பித்த மலேசியர்களுக்கு வாழ்த்துக்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் ஜனவரி 2 அன்று தொடங்கப்பட்ட பாடு அமைப்பில் மக்கள் மார்ச் 31க்குள் www.padu.gov.my என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள், குறிப்பாக குடும்பத் தலைவர்கள், உதவி அல்லது இலக்கு மானியங்களைத் தவறவிடாமல் இருக்க பாடு அமைப்பில் உடனடியாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்னும் பதிவிற்கு ஆறு நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே, பதிவு செய்யதவர்கள் ஒன்பது மாவட்டங்களில் ஏற்பாடு செய்துள்ள காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் 50க்கும் மேற்பட்ட கவுண்டர்களில் பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள்.


Pengarang :