SELANGOR

602 கிலோகிராம் ரம்ஜான் பஜார் உணவு ‘சேமிக்கப்பட்டு’ ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 27: மொத்தம் 602 கிலோகிராம் ரம்ஜான் பஜார் உணவு ‘சேமிக்கப்பட்டு’ ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு (B40) சுபாங் ஜெயா மாநகராட்சி விநியோகம் செய்தது

அந்த உணவு RM14,448 மதிப்புடையதாக தெரிவிக்கப்பட்டது. ரம்ஜான் உணவு கழிவுகளை தவிர்த்தல் திட்டத்தின் மூலம் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து ஆறு இடங்களில் இத்திட்டம் மேற்கொள்ளப் பட்டதாகச் சுபாங் ஜெயாவின் மேயர் கூறினார்.

நோன்பு மாதம் வரை மேற்கொள்ளபடும் இத்திட்டம், கழிவு மேலாண்மைச் செலவுகளைச் சேமிப்பதோடு, ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பிரச்சனையையும் தீர்க்க முடியும் என டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

“இந்த உணவுகள் அனைத்தும் பிளாட் SS19, பூச்சோங் இண்டா, நலன்புரி இல்லங்கள் மற்றும் புக்கிட் லாஞ்சோங்கில் உள்ள குறைந்த திறன் கொண்ட குடியிருப்பாளர்கள் உட்பட பல சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு அனுப்பப்படுகின்றன,” என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், சுபாங் ஜெயா மாநகாரட்சியின் கீழ் உள்ள அனைத்து ரம்ஜான் பஜார்களிலும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் மற்றும் பாலிஸ்டிரீன் இனி பயன்படுத்தப்படாது என்று முகமட் ஃபௌசி கூறினார்.


Pengarang :