SELANGOR

50 பெறுநர்களுக்கு ஐடில்பித்ரி உதவியை வழங்க ரிம12,500 ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 27: ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) 50 பெறுநர்களுக்கு ஐடில்பித்ரி உதவியை வழங்க ரிம12,500 ஒதுக்கீடு செய்தது.

ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் RM100 ரொக்கம் வழங்கப்பட்டது என மேயர் செராமி தர்மன் கூறினார்.

“நன்கொடை பெறுபவர்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் (B40), முதியவர்கள், ஒற்றைத் தாய்மார்கள், நகர்ப்புறத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மற்றும் ஊனமுற்றோர் (OKU) அடங்குவர்.

“இத்திட்டம் அவர்களின் சுமையை குறைக்கும் அதே நேரத்தில் ஹரி ராயா ஐடில்பித்ரியை கொண்டாடுவதற்கான வாய்ப்பையும் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று மேயர் கூறினார்.

இதற்கிடையில், இந்த உதவி பலகாரங்கள் உட்பட ராயா உபகரணங்களை வாங்கும் சுமையை குறைக்கும் என்று கூறி 60 வயதான ஜுமரியா யாக்கோப் நன்றி தெரிவித்தார்.

“இந்த உதவிக்கு நன்றி, குறைந்த பட்சம் சமையலறை பொருட்களை வாங்கும் செலவையாவது மிச்சப்படுத்தலாம்” என்று கூறினார்.

இதற்கிடையில், முதல் முறையாக எம்பிஎஸ்ஏயிலிருந்து உதவியைப் பெற்ற முகமட் அசிஹ்ராஃப் இஷாக் (31) மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் இத்திட்டம் எதிர்காலத்திலும் தொடரும் என்று நம்புகிறார்.


Pengarang :