SELANGOR

நான்கு மசூதிகள் மற்றும் 10 சூராவ்களுக்கு RM32,000 நன்கொடை

ஷா ஆலம், மார்ச் 29: ரம்ஜான் மாத நடவடிக்கைகளைச் செயல்படுத்த நான்கு மசூதிகள் மற்றும் 10 சூராவ்களுக்குப் பண்டமாறான் தொகுதியின் சமூக சேவை மையம் மொத்தம் RM32,000 வழங்கியது.

இஸ்லாமிய நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்குவதோடு, தெலுக் காடோங், சுங்கை ஊடாங், கம்போங் ராஜா ஊட மற்றும் கம்போங் பாரு பண்டமாறனின் கிராமச் சமூக மேலாண்மை கவுன்சில் (எம்பிகேகே) ஆகியவற்றை உள்ளடக்கிய லாம்போக் கஞ்சி விநியோகத் திட்டத்தையும் அவரது தரப்பு ஏற்பாடு செய்துள்ளது என லியோங் டக் சீ கூறினார்.

“தொகுதி சேவை மையம் சன்வே குழுவுடன் இணைந்து பண்டமாறான் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஸ்ரீ அங்கசா அடுக்குமாடி குடியிருப்புகளில் 200 உணவு கூடைகளை விநியோகித்துள்ளது.

“கிள்ளான் நாடாளுமன்றத்தின் இணைந்து லும்புக் கஞ்சி தயாரிக்கும் திட்டத்தில் பல இன சமூகமும் பங்கேற்றதால் ஒற்றுமை உணர்வினை சமூகத்தில் விதைப்பதில் வெற்றி பெற்றது” என்று அவர் சிலாங்கோர்கினியிடம் கூறினார்.

ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு RM200 மதிப்புள்ள 500 ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் மார்ச் 31 அன்று ஜயண்ட் புக்கிட் திங்கி யில் வழங்கப்படும் என்றார்.

“இத்திட்டம் தகுதியான பெறுநர்களுக்கு ராயாக் கொண்டாட்டத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க உதவும். இதனால் அவர்களின் சுமை குறையும்” என்று அவர் கூறினார்.


Pengarang :